இனிய அமிருதம் போன்ற உணவை யுண்டு, மெய் குளிர்ந்து - உடம்பு குளிரப்பெற்று, அசைவு தீர்தலும் - அயர்ச்சி (சிறிது) நீங்கியவளவில்,- இருந் தபனனும்-பெருமையுள்ள சூரியனும், 'இவர் வருந்தினர் - இச்சேனைவீரர் (வழிகடந்து) இளைப்படைந்தார்கள்: (ஆதலால்), துயில் வதிய வேண்டும் - (இவ்விளைப்புத்தீர) நித்திரைசெய்ய வேண்டும்,' என்று - என்று கருதி, இவர்க்கு - இச்சேனைவீரர்கட்கு, இரவு நல்கினான் - (தான்) இராப்பொழுதை உண்டாக்கினான்; (எ - று.) சூரியன் இயல்பிலே அஸ்தமிக்க இரவுதோன்றியதை, சேனை வீரர்களின் இளைப்பைக் கண்டு அவர்கள் நித்திரைசெய்து இளைப்புத் தீர்த்துக்கொள்ளுதற்பொருட்டு அஸ்தமித்து இரவை யுண்டாக்கியதாகக் காரணங்கற்பித்துக் கூறியது - ஏதுத்தற்குறிப்பேற்றவணியாம். 'இவர்க்கு இரவுநல்கினான்' என்ற தொடர் - இப்பாண்டவர்கட்கு இரத்தற்கு உரிய வறுமையைக் கொடுத்தானென்று ஒரு பொருள்பட்டு அமங்கலமாகி, இனிப் பாண்டவர் இராச்சியம் முதலிய செல்வங்களையெல்லாம் இழந்து வறுமைப்படுவதைக் குறிப்பிக்கு மென்னலாம். விருந்து - புதுமை. அமுது - அமிருதம்போ லினிய உணவுக்கு உவமையாகுபெயர். அருந்துதல்-உண்பன தின்பன நக்குவன பருகுவன என்றவற்றின் பொதுவினை. (267) 115.- சந்திரோதயம். மண்வளர் பெரும்புகழ்மன்ன ரைவரும் பண்வளர் நல்லிசைப் பலமகீபரும் கண்வளர் பாளையங் காணவெண்ணியே விண்வளர் குபேரனும்விழைந்து தோன்றினான். |
(இ -ள்.) மண் வளர் பெரும் புகழ் மன்னர் ஐவரும்-பூமியிற் பரந்த பெருங்கீர்த்தியையுடைய அரசர்களாகிய பாண்டவர் ஐவரும், பண் வளர் நல் இசை பல மகீபரும்-இசைப்பாட்டிற் பாடப்பட்டு மிகுகின்ற நல்ல கீர்த்தியுடைய (மற்றும் அப்பாண்டவர்களுடன் வந்த) பல அரசர்களும், கண் வளர் - தூங்குவதற்கு இடமான பாளையம் - படைவீட்டை, காண-பார்த்தற்கு, எண்ணி- ,-விண் வளர் குபேரனும் - ஆகாயத்திற் கலைவளர்க்கின்ற சந்திரனும், விழைந்து தோன்றினான் - விரும்பி உதயமாயினான்; (எ - று.) சந்திரன் இயல்பிலுதித்ததை, பாண்டவர்களும் மற்றையரசர்களும் நித்திரை செய்கின்ற படைவீட்டின் சிறப்பைக் காணக்கருதி உதித்ததாகக் காரணங்கற்பித்துக் கூறியதனால், இதுவும் - ஏதுத்தற்குறிப்பேற்றவணியே. புகழைக்குறித்துப் புலவர்பாடிய கவிகளையாழிலமைத்துப் பண்ணுக்கு இயையப்பாடுதல் மரபாதலால், 'பண்வளர் நல்லிசை' என்று விசேடித்துக்கூறினார். மஹீபர்-பூமியைக் காப்பவர்; மஹீ - பூமி. பாளையம், பாசறை, படைவீடு, பாடிவீடு என்பன - ஒருபொருளன; சேனைதங்குமிட மென்பது, பொருள். |