பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 278

கொண்ட, செம்சுடரவன் - செந்நிறமான கிரணங்களையுடைய சூரியன்,
குணதிசையில் தோன்றினான் - கிழக்குத்திக்கில் உதயமாயினான்; (எ - று.)

     சூரியன் இயல்பிலேயுதித்ததை, சந்திரன்மீது பகைமை கொண்டு
உதித்ததாகக்  குறித்தார்: ஏதுத்தற்குறிப்பேற்றவணி. தருமபுத்திரன் மிகச்
சிறப்புற்று வாழ்தலை பொறாது வஞ்சனையாக அவனது செல்வச்
சிறப்புக்களையெல்லாங் கவர்ந்து அவனது உயர்ச்சியை அறக்கெடுக்க விரும்பி
முயலுந் துரியோதனனது மனம், சந்திரனை ஒளிரவொட்டாமல் மழுங்கச்செய்து
உதயமாகின்ற சூரியனுக்கு ஏற்ற உவமையாம். பதம் = பதவி.  கொல் - அசை,
ஏ - இசைநிறை.  மிஞ்சிய-விஞ்சிய என்பதன் மரூஉ.  குணக்கு+திசை =
குணதிசை: திசைப்பெயர், ஈற்றுஉயிர்மெய்யுங் ககரவொற்றுங் கெட்டது.(276)

வேறு. 

124.-பாண்டவர்கள்அத்தினாபுரி சேர்தல். 

துயிலு ணர்ந்துபைந்தொடையன் மார்பினான்
வெயிலெ ழுந்துதன் விரதமுற்றபின்
பயில்பெ ருஞ்சனம் பாசறைப்படுத்து
எயில்வ ளைந்தமா நகரியெய்தினான்.

     (இ -ள்.) பைந் தொடையல் மார்பினான் - பசுமையான (குவளைமலர்)
மாலையைத் தரித்த மார்பையுடையவனாகிய தருமபுத்திரன்,- துயில் உணர்ந்து-
தூக்கம்விட்டெழுந்திருந்து,- வெயில் எழுந்து - சூரியன் உதயமாக, தன் விரதம்
உற்றபின்-தனது விரதாநுட்டானங்களைச்செய்து முடித்த பின்பு,- பயில் பெருஞ்
சனம் பாசறை படுத்து - (தன்னுடன் வந்த மிக்க ஜநக்கூட்டத்தை) அந்தப்
பாசறையிலேயே இருக்கவிட்டு, எயில்வளைந்த மா நகரி எய்தினான்-
மதில்சூழ்ந்த பெரிய அத்தினாபுரியைச்சென்று சேர்ந்தான்;

    'தொடையல்மார்பினான்' என்றது-மற்றைப் பாண்டவர் நால்வர்க்கும்,
திரௌபதிக்கும், 'சனம்' என்றது - பதாதியரொழிந்த மற்றை மூவகைச்
சேனைகட்கும் உபலட்சணம்.  சேனைகளைப் பாண்டவர்கள் உடன்
அழைத்துக்கொண்டு செல்லாதது, அவ்வளவு பெருஞ்சேனைகட்கு
அத்தினபுரியில் தங்க இடம்போதாதாதலாலும் அச்சேனைகளினால்
நகரத்திற்குஉபத்திரவமுண்டாகுமென்னுங் கருத்தினாலு மென்க.  எழுந்து=எழ:
எச்சத்திரிபு: இங்கு 'விரதம்' என்றது, காலைக்கடனை.             (277)

125.-பாண்டவர்கள்திருதராஷ்டிரனது அரண்மனையிற்
சேர்தல்.
 

இரும ருங்கினுமிளைஞர் நால்வருந்
தரும வல்லியுந்  தானுமாகவே