பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 279

அரும டங்கவே றனையவாண்மையான்
குரவ னின்புறுங்கோயி னண்ணினான்.

     (இ -ள்.) மடங்கல் ஏறு அனைய அரு ஆண்மையான் - ஆண் சிங்கம்
போன்ற அருமையான பராக்கிரமத்தை யுடையவனாகிய தருமபுத்திரன்,-இரு
மருங்கினும்-(தனது) இரண்டுபக்கத்திலும், இளைஞர் நால்வரும் - (தனது)
தம்பியர் நான்குபேரும் (உடன்வர), (அவர்கட்குநடுவே), தருமவல்லியும் தானும்
ஆக - பூங்கொடி போன்ற (தனது) தருமபத்தினியாகிய திரௌபதியும் தானுமாக,
குரவன் இன்பு உறும் கோயில் நண்ணினான் - (தனது) பெரிய தந்தையாகிய
திருதராட்டிரன் இனிது வாழ்கின்ற அரண்மனையைச் சென்று சேர்ந்தான்;
(எ - று.)

     கணவன் செய்யுந் தருமகாரியங்கட்கு உடனிருந்து உதவுதல் காரணமாக
மனைவிக்குத்  தருமபத்தினியெனப்  பெயருள்ளதனால், யுதிஷ்டிரனது
மனைவியாகிய திரௌபதியை 'தருமவல்லி' என்றார், தருமவல்லி என்பது -
அடையடுத்த உவமவாகுபெயர்.  வல்லீ - பூங்கொடி: வடசொல்.  கணவன்
தரும தரு, மனைவி அத்தருவைக் கொள்கொம்பாகக்கொண்ட தருமவல்லி என
நயங் காண்க.  கற்பகதரு, காமவல்லி என்றாற்போல, தருமவல்லியுந் தானும்
நண்ணினான் - ஆண்பாலும் பெண்பாலும் கலந்து சிறப்பினால்
ஆண்பால்முடிபைப்பெற்ற பால்வழுவமைதி; [நன் - பொது-27.] ஆண்மை-
பௌருஷம்.  'குரவ:' என்ற வடமொழிப்பன்மைப்பெயர் தமிழில் 'குரவர்' எனத்
திரிந்து வருவதற்கு ஏற்ப, ஒருமையில் 'குரவன்' எனக் கொள்வர்.        (278)

126.- பாண்டவர்கள்திருதராட்டிரனை வணங்குதல். 

சிந்தை யன்புறச் செல்வவாயிலோர்
வந்த மைந்தர்தம் வரவுகூறவே
முந்தை யேவலான் மொழியவுள்புகுந்து
அந்த மீளிசே வடிவணங்கினார்.

     (இ -ள்.) செல்வம் வாயிலோர் - செல்வச்சிறப்பையுடைய
அவனரண்மனை வாயிலிலுள்ள காவலாளர்கள், சிந்தை அன்புஉற வந்த
மைந்தர்தம் வரவுகூற - (தமது) மனத்திலே (பெரியதந்தையாகிய
திருதராட்டிரனைக் காணவேண்டுமென்று) ஆவல் மிகுதி யாகப்பொருந்த
(அங்கு) வந்துசேர்ந்த (தம்பியின்) குமாரர்களாகிய பாண்டவரது வருகையை
(அத்திருதராட்டிரனுக்குச்) சொல்ல, (உடனே). முந்தை ஏவலால் -
அப்பெரியதந்தை கட்டளையிட்டபடியே, மொழிய - (மீண்டுவந்து
உள்ளேவரலாமென்ற செய்தியைச்) சொல்ல,- (பாண்டவர்கள்)- உள் புகுந்து-,
அந்த மீளி சே அடி வணங்கினார்-அரசனான அந்தத் திருதராட்டிரனது
சிவந்த பாதங்களை வணங்கினார்கள்; (எ - று.)

    பாண்டவர் வருகையை வாயில் காவலோர் திருதராட்டிரனுக்குக்கூறி,
அவன் உள்ளேவரலாமென்றுகூறிய அனுமதியைத்