| யிலும் நெய்ப்பிலும் திரண்டுருண்டு நீண்டவடிவத்திலும் இள மூங்கில் - திரௌபதியின் தோள்கட்கும், விளக்கத்திலும் ஒல்கியொசிதலிலும் மின்னல் - அவளது மேனிக்கும் உவமையாம். சேய் - செந்நிறம்பற்றி வந்தபெயர்; முருகக்கடவுளைக் குறிக்கும் இப்பெயர் - உவமையாகுபெயராய் அக்கடவுள் போன்ற வீரம் அழகு முதலிய குணங்களையுடைய ஏனையோர்க்கும் வழங்கும். மின். உவமவாகுபெயர். அகண்டம் - வடசொல். (289) 137.- பாண்டவர்கள் தாம்வந்த காரணத்தை வீடுமனிடஞ் சொல்லுதல். வேந்த ழைத்ததும் விதுரனேவலிற் போந்த ழைத்ததும் புகலவந்ததுந் தாந்த ழைக்கவே தந்தைதந்தைமுன் தேந்த ழைத்ததார்ச் செல்வர்கூறினார். |
(இ -ள்.) தேன் தழைத்த தார் செல்வர் - தேன் மிக்குப் பொருந்திய மலர்மாலையையணிந்த செல்வச்சிறப்பையுடையவர்களாகிய பாண்டவர்கள், - வேந்து அழைத்ததும் - திருதராட்டிரமகாராசன் (தன்னிடத்திற்கு வரும் பொருட்டுத் தங்கட்குத்) திருமுகம் விடுத்ததையும், ஏவலின் விதுரம் போந்து அழைத்ததும் - (அத்திருதராட்டிரனது) கட்டளையினால் விதுரன் (இந்திரப்பிரத்தத்திற்கு) வந்து (திருமுகங்கொணர்ந்து கொடுத்துத் தங்களை நேரில்) அழைத்ததையும், புகல வந்ததும் - (அங்ஙனம் விதுரன்) சொல்லத் (தாங்கள்) வந்ததையும், தாம்-, தந்தை தந்தை முன் - பாட்டனாகிய வீடுமனிடத்தில், தழைக்க கூறினார் - விவரமாகச் சொன்னார்கள்; (எ - று.) இலக்கணையால், முதலிலுள்ள 'அழைத்ததும்' என்பது, திருமுகம் விடுத்ததை யுணர்த்திற்று. தந்தைதந்தை - தந்தைக்குத் தந்தை; பிதாமகன். (290) 138.- அதற்கு வீடுமன் கூறுதல். புள்ள லங்கலார் புரிவுரைத்திடக் கொள்ளை வன்றிறக் குருகுலேசனும் கள்ள வஞ்சர்வெங் கருவிசெய்யினும் உள்ள துண்டெனா வுண்மைகூறினான். |
(இ -ள்.) புள் அலங்கலார் - வண்டுகள் மொய்க்கும் மலர் மாலையையணிந்த பாண்டவர்கள், புரிவு உரைத்திட - (தாங்கள் வந்த) செய்தியைச் சொல்ல,- (அதைக்கேட்டு), கொள்ளை வல்திறல் குருகுல ஈசனும் - மிகவும் வலிய சாமர்த்தியத்தையுடைய குருகுலத்தாரில் தலைவனான வீடுமனும், 'கள்ளம் வஞ்சர் - திருட்டுத்தனமாகத் தீங்குசெய்யுங் கருத்துடையவர்கள், வெம் கருவி செய்யினும் - (தீமைநேரும்படி) கொடிய உபாயங்களைச்செய் |