பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 287

தாலும், உள்ளது உண்டு - விதியினால் அனுபவிக்கவேண்டிய நன்மை
வந்தேதீரும்,' எனா - என்றும், உண்மை கூறினான் - தத்துவத்தை
யெடுத்துரைத்தான்; (எ - று.)

    பாண்டவர்கள் இராச்சியம் முதலியவற்றை யிழந்து மிகவருந்தும்படி
துரியோதனாதியர்கள் பலவகையாக முயற்சிசெய்தும் முடிவிலே பாண்டவர்களே
துரியோதனாதியர்களை வென்று அரசு பெற்று இனிதுவாழ்வாரென்பது,
வீடுமனுட்கோள்: அவ்வாறே மேல் நிகழ்தல் காண்க.  'வெங்கருவி செய்யினும்'
என வந்ததனால், 'உள்ளது' என்பதற்குத் தீமையெனப் பொருள்கொள்ளாமல்
வரக் கூடிய நன்மையென்றே பொருள் கொள்ளப்பட்டது.
பின்னிரண்டடியிற்கூறிய பொதுப்பொருள் 'துரியோதனாதியர் என்ன தீங்கு
செய்தாலும் நுமக்கு ஒன்றும் குறைவுவராது' என்னுஞ் சிறப்புப் பொருளைத்
தெரிவித்தது, பிறிதுமொழிதலணியாம்.  'புள்' என்ற பொதுப்பெயர், சிறப்பாய்
வண்டையுணர்த்திற்று; இது, ஒருவகை இலக்கணை.  அலங்கல்-
தொங்கியசைவது என மாலைக்குக் காரணக்குறி.  புரிவு - அன்போடு,
உரைத்தலும் - (தமது செய்தியைத்) தெரிவித்தவுடனே எனக் கூறலுமாம்.
குருகுல+ஈசன்=குருகு லேசன்: குணசந்திபெற்ற வடமொழித்தொடர்; 'அ ஆ
முன் இ ஈ வரின் அவ்விரண்டுங்கெட ஓர் ஏகாரந் தோன்றும்.'       (291)

139.- பாண்டவர்கள் துரோணன்முதலியோரை வணங்குதல்.

தாதை தாதையைத் தாம கன்றுபின்
கோதை வெஞ்சிலைக் குருவைமைந்தனைக்
கீத நான்மறைக் கிருபனைச்செழும்
பாத நஞ்செய்தார்பரிவொ டேகியே.

     (இ -ள்.) தாம் - அப்பாண்டவர்கள்,-தாதை தாதையை அகன்று -
பாட்டனாகிய வீடுமனை விட்டுப்பிரிந்து,- பரிவொடுஏகி - அன்போடு சென்று,
பின்-பின்பு, கோதை வெம் சிலை குருவை - மாலையையணிந்த
கொடியவில்லையுடைய ஆசிரியனாகிய துரோணனையும், மைந்தனை -
(அவனது) குமாரனாகிய அசுவத்தாமனையும், கீதம் நால் மறை கிருபனை -
சுவரங்களையுடைய நான்கு வேதங்களிலும் வல்லவனான கிருபாசாரியனையும்,
செழும் பாதநம் செய்தார் - சிறப்பாக [மனப்பூர்வமாக] வணக்கஞ்செய்தார்கள்:
(எ - று.)

     'கோதை' என்பதைச் சிலைக்கேனும் குருவுக்கேனும் அடைமொழியாக்
கொள்ளலாம்.  குரு - அஜ்ஞாநமாகிய இருளைப் போக்குபவ னென்று
பொருள்படும் வடசொல். (கு-இருள், ரு - ஒழிப்பவன்). கிருபன் - கௌதம
முனிவனது பௌத்திரன்;  துரோணன் மனைவியான கிருபிக்கு
உடன்பிறந்தவன்;  துரியோதனாதியர்க்கும் பாண்டவர்க்கும் முதல்
வில்லாசிரியன்; நாணற்காட்டிற்பிறந்த இவனை அங்கு வேட்டையாடவந்த
சந்தநுமகாராசன் கண்டு கிருபையினால் எடுத்து வளர்த்தமைபற்றி, இவனுக்கு
இப்பெயர்