வந்தது. பாதநம் - பதநம் என்ற வடசொல்லின் நீட்டல்; கீழ்வீழ்ந்து வணங்குத லென்பது பொருள். இனி, செழு - செழுமையாகிய [அழகிய], பாதம் - பாதங்களில், நம் - வணக்கத்தை, செய்தார் எனப் பதவுரை கூறினுமாம். (292) 140.-துரோணன் முதலியஅந்தணரிடத்து ஆசிபெற்றுப் பாண்டவர்கள் விதுரன்மாளிகை சேர்தல். சதுர மாமறைத் தலைவர் தங்களால் எதிர்மொ ழிந்தபே ராசியெய்தியே மதுர மன்றனாண் மாலைமன்னரும் விதுரன் மந்திர மீளமன்னினார். |
(இ -ள்.) மதுரம் மன்றல் நாள் மாலை மன்னரும் - இனிய வாசனையுள்ள அன்றுமலர்ந்த [புதிய] மலர்மாலையைத் தரித்த அரசர்களாகிய பாண்டவர்களும்,-மா சதுரம் மறை தலைவர் தங்களால் - சிறந்த நான்கு வேதங்கட்கும் உரியவரான [பிராமணராகிய] துரோணன் முதலியோரால், எதிர் மொழிந்த-எதிரிற்கூறப்பட்ட, பேர் ஆசி எய்தி - சிறந்த ஆசீர்வாதங்களைப் பெற்று, மீள-பின்பு, விதுரன் மந்திரம் மன்னினார் - விதுரனது மாளிகையிற் சென்று சேர்ந்தார்கள்; (எ - று.) 'மறைத்தலைவர்' என்றது-கீழ்ச்செய்யுளில் வந்த துரோணன் அசுவத்தாமன் கிருபன் என்ற மூவரையுங் குறிக்கும். சதுரம் - வடசொற்றிரிபு. இனி, சதுரம் மாமறை என்பதற்கு-சதுரப்பாட்டையுடைய பெரியவேதம் என்றும் பொருள் கொள்ளலாம். எதிர் மொழிந்த பேர் ஆசி - (பாண்டவர் வணங்கும்போது அவர்கட்கு) எதிரிலே கூறிய வாழ்த்து என்றும், (அவர்களது வணக்கத்திற்கு) ஈடாகச்செய்த வாழ்த்து என்றும் இருவகையாகப் பொருள்படும். மதுரம்-தேனுமாம். மூன்றாமடி - முற்றுமோனை. மந்திரம், வடசொல். (293) 141.-பாண்டவர்விதுரன்மாளிகையிற் புசித்திருக்க, சூரியன் அஸ்தமித்தல். தமதின் மெய்யுறத் தம்ம தாகவே அமிழ்த ருந்தியங் கவரிருந்தபின் திமிர நாசனன் செய்யமேனியன் கமல நாயகன் கடலின்மூழ்கினான். |
(இ -ள்.) அவர் - அப்பாண்டவர், தமதின் - தம்முடைய கிருகம் போலவே (விதுரனது கிருகத்தைப்பாவித்து), தம்மது அமிழ்து ஆகவே - (விதுரனுடைய அன்னமாயிருந்தாலும் வேறுபாடு கருதாமல்) தம்முடைய அன்னமாகவே, மெய் உற அருந்தி - மனப்பூர்வமாகப் பாவித்து (அவ்விதுரனிட்ட அன்னத்தை) உண்டு, அங்கு இருந்த பின் - அவ்விதுரனது மாளிகையில் தங்கியிருந்தவளவில்,-திமிரம் நாசனன்-இருளை யொழிப்பவனும், |