கொங்கை - தனங்கள், தோய் - அழுந்தப்பெற்ற, ஏந்து தோளினான் - உயர்ந்த தோள்களையுடையவனான தருமபுத்திரன், இவண் இருந்துழி - இவ்வாறு விதுரன் மாளிகையில் வீற்றிருந்தபோது, பாந்தள் அம் கொடி பார் மகீபனை சேர்ந்த மன்னர் தம்-பாம்புக்கொடியையுடைய நிலவுலகத்தரசனான துரியோதனனைச் சேர்ந்த அரசர்கள் செய்த, செயல்-செய்கையை, விளம்புவாம்-இனி எடுத்துச் சொல்வோம்; (எ - று.) விதுரன் மாளிகையில் தருமனிருந்தானாக, துரியோதனனைச் சார்ந்த மன்னரின் செய்கையைக் கூறுவோ மென்பதாம். சபையினழகைக்காணுதலென்று வியாஜம் வைத்துத் துரியோதனன் அங்கு வரவழைத்துச் சூதாடத்தூண்டுதலும் தருமன் அதற்கு உடன்படாமையுமே அடுத்து நிகழ்வனவாயினும், தருமனைத் துரியோதனன் கருத்தை யொட்டிச் சூதாடச் செய்தலைச் சகுனி முதலியோர் செய்தது முக்கியமென்று, 'மகீபனைச் சேர்ந்த மன்னர் செயல் விளம்புவா' மென்கிறார். பூவை - நாகணவாய்ப்பறவை. 'மலர்ப் பூவை' என்ற தொடர் - அடையடுத்த உவமவாகுபெயராய்த் திருமகளைக் குறித்து, பின்பு அவள் போன்ற திரௌபதியைக் குறித்தலால்,- இருமடியாகுபெயர். 'நிலவுலகத்தை ஆளும் மன்னவர் திருமாலின் அமிசமுள்ளவர்' என்ற நூற்கொள்கைக்குஏற்ப, 'பூ...தோளினான்' என்பதற்கு - இலக்குமியின் தனங்கள் தோயப்பெற்ற தோள்களையுடைய தருமபுத்திரன் என்றே பொருள் கூறினுமாம். இனி வீரலக்ஷ்மி பொருந்தப்பெற்ற தோள்களையுடைய தருமபுத்திர னெனினும் இழுக்காது. 'பாந்தளங்கொடி' - அம் - சாரியை; "நெய்தலம்பறை" என்றவிடத்துப்போல. 'பார்மகீபன்' என்றவிடத்து, முன் 'பார்' என வந்ததனால், மகீபனென்றது-அரசனென்ற மாத்திரமாய் நின்றது: "அடியளந்தான்றாஅயது" என்றாற்போல. விளம்புவாம் - கவிகளுக்குரிய இயற்கைத்தனித்தன்மைப்பன்மை. இவண் - இவ்விடத்தில்: இவ்வண்ணம். (305) வேறு. 153.-துரியோதனனதுசபாமண்டபத்தில் எல்லாரும் திரளுதல். தானு மாம னுங்கு றித்த தம்பி மாருமங்கர்தங் கோனு மாசி றந்தை தந்தைகொடும ரக்கை விதுரனும் வானு லாவு புகழ்ப டைத்த மைந்தனுந்து ரோணனும் ஏனை யோரும் வந்து கூடி யினிதிருந்த வெல்லையே. |
இதுவும், அடுத்த கவியும் - குளகம். (இ -ள்.) தானும் - துரியோதனன்தானும், மாமனும் - (இவனது) மாமனாகிய சகுனியும், குறித்த தம்பிமாரும் - (துச்சாதனன் முதலாகக்) கூறப்பட்ட தம்பியர் தொண்ணூற்றொன்பதின்மரும், அங்கர்தம் கோனும் - அங்கதேசத்தார்க்கு அரசனாகிய |