மாலையையணிந்த மார்பையுடையவனாகிய சிறந்த அந்தப்பிராதிகாமியும், வான் அண்டர் கற்பம் என இருந்த அரசர் தம்மை - வானுலகத்திலுள்ள தேவர்களது ஐந்து கற்பகவிருட்சம்போல (விதுரனது மாளிகையிலே ஈகைக்குணத்தோடு) வீற்றிருந்த பாண்டவர்களை, அணுகினான் - நெருங்கிச்சேர்ந்தான்; (எ - று.) கீழ்77-ஆஞ் செய்யுளிலும் பாண்டவர்கட்குக் கற்பகவிருட்சத்தை உவமை கூறினார். ஐந்து தேவதருக்களுள் ஒன்றன் பெயராகிய 'கல்பம்' என்பது, இங்கே பொதுவாய்த் தேவதருக்களைந்தையும் குறிக்கும். இமைப்பு - இயல்பாக மனிதர் ஒருகால் கண்ணிமைத்தற்கு வேண்டுங் காலம்; இது, 'மாத்திரை' எனவும் படும். பிராதிகாமி - துரியோதனனது சாரதி. (307) 155.-பிராதிகாமி துரியோதனனதுகட்டளையைத் தெரிவித்தல். சென்றி யாக பதிக ழற்றி ருப்பதம்ப ணிந்துநீள் நின்று வாய்பு தைத்த றங்கணிலைபெ றுஞ்சொ னீதியாய் வென்றி வீரன் மண்ட பத்தின்விரிவு காண வேண்டுநீ என்று கூறி யேவி னானிங்கென்னை யென்றி யம்பினான். |
(இ -ள்.) (பிராதிகாமியானவன்),-சென்று - (பாண்டவர்களிருந்த இடத்திற்குப்) போய், யாகபதி கழல்திருப்பதம் பணிந்து - இராசசூயயாகஞ்செய்த அரசனாகிய தருமபுத்திரனது வீரக்கழலையணிந்த சிறந்த பாதங்களை வணங்கி, நீள் நின்று - தூரத்தில் நின்று, வாய் புதைத்து - (கையினாலே தனது) வாயைப் பொத்திக்கொண்டு, (தருமபுத்திரனை நோக்கி), 'அறங்கள் நிலைபெறும் சொல் நீதியாய் - தருமங்கள் நிலைபெறுதற்கேற்ற சொற்களையும் நீதியையுமுடைய அரசனே! வென்றி வீரன் - வெற்றியையுடைய வீரனாகிய துரியோதனராஜன், மண்டபத்தின் விரிவு நீ காண வேண்டும் என்று கூறி - '(தான் கட்டிய புது) மண்டபத்தினது பரப்பினழகை நீ பார்க்கவேண்டும்' என்று சொல்லி, (உன்னை அழைத்து வருமாறு), இங்கு என்னை ஏவினான் - இவ்விடத்திற்கு என்னை அனுப்பினான்,' என்று இயம்பினான்-என்று (தான் வந்த காரணத்தை) விண்ணப்பஞ் செய்தான்; (எ - று.) கழல் - வீரர்கள் தமது வீரத்திற்கு அறிகுறியாகக் காலில் அணிவதோர் ஆபரணம். பெரியோரிடம் தூரநின்று வாய் பொத்திப்பேசுதல், பணிவுக் குறிப்பு. (308) 156.-தருமபுத்திரன்திரௌபதியைக் காந்தாரியிடம் அனுப்பிவிட்டுத் தான் துரியோதனனது சபையைச் சேர்தல். ராய சூய பன்னி தன்னை யெந்தையில்லில் யாயொடும் போயி ருந்து வருக வென்றுபுரையி லாம னத்தினான் |
|