பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 305

நோக்கி 'சூதாடவா' என்று எவர்தாம் அழைப்பவர்? (ஒருவரும் அழைத்தே
யிருக்கமாட்டார்); (எ - று.)-இரண்டாமடியினீ்ற்றில், ஆல் - அசை. 

     இதுவும், அடுத்த கவியும் - சகுனிதருமனைப் படர்க்கையாகக் கொண்டு
சபையோரை முன்னிலைப்படுத்திக் கூறியன. 

     'சூது வஞ்சனைக்கு இடமானது' என்று கூறியதருமபுத்திரனுடைய
மனக்கருத்தை மாற்றும்பொருட்டு, சகுனி 'நான் ஆடும்போது விழும்
பந்தயங்கள் எவ்வாறு கொள்ளப்படுமோ, அவ்வாறு தான் தருமன்
ஆடும்போதும் விழும் பந்தயங்கள் கொள்ளப்படும்; ஆகையால்,
பாச்சிகைகளின் மூலமாய் விழும் பந்தயங்கட்கு ஏற்பக் காய்களைத் தக்கபடி
அறைகளில் அடைக்குந் திறத்தினாலேயே வெற்றியை யடையவேண்டிய
இச்சூதாட்டத்தில் யாவரும் பார்க்க ஆடும்போது வஞ்சகஞ்செய்ய வழியேது?
இப்படி வஞ்சகமில்லாத இவ் வாட்டத்தில் தனக்கு விருப்பமில்லாத
காரணத்தால் இது வஞ்சனையுளதென்று போக்குச் சொன்னால், இவனை
வலிவிற் சூதாட இழுப்பார் ஒருவருமில்லை என்று வஞ்சனைக்கருத்துச் சிறிதும்
இல்லாதவன்போல் வெகு தந்திரமாகக் கூறின னென்க.  கவறு - சூதாடு கருவி;
பாச்சிகை.  தாயம் - பாச்சிகையை யுருட்டும்போது விழும் பந்தயங்கள்.
உருண்ட - காரணப்பொருட் பெயரெச்சம்.  வைப்பு-தொழிற்பெயர்.
ஆர்கொல், கொல்-அசை.  "கல்வி தறுகணிசைமைகொடையெனச்சொல்லப்பட்ட
பெருமித நான்கே" என்பவாதலால்,அறிவின்றிறம் 'ஆண்மை' எனப்பட்டது. 
                                                           (317)

165.வேணு மாகில் வேணு மன்றி விரகெ னக்க ழன்றுதான்
நாணு மாகில் விடுதி யேந டக்க வென்று நவிலுவீர்
பூணு மாகி லினிமை யோடு பொருது மற்றி ருந்தநீர்
காணு மாறு நானு மின்று கற்ற வாறி யற்றலாம்.

     (இ - ள்.) வேணும் ஆகில் வேணும் -(சூதாடுவதில் இவனுக்கு) விருப்ப
முண்டானால் (எனக்கும்) விருப்பமுண்டு;  அன்றி - விருப்பமில்லாமல், விரகு
என கழன்று தான் நாணும் ஆகில் - (இது) வஞ்சனையுளதென்று ஒதுங்கித்
தான் (சூதாடப்) பின் வாங்குவானானால், விடுதியே நடக்க என்று நவிலுவீர் -
'(நினது) இருப்பிடத்திற்குச் செல்வாயாக' என்று (தருமபுத்திரனைநோக்கிச்)
சொல்லுங்கள்; பூணும் ஆகில்-(அவன்) சம்மதித்து ஆடுவானானால், நானும்-,
இனிமையோடு பொருது - இனிமையாக விளையாடி, இருந்த நீர் காணும் ஆறு
- இங்கிருக்கிற நீங்களெல்லோரும் காணும்படி, இன்று - இப்பொழுது, கற்ற
ஆறு-(எனக்கு உள்ள) சாமர்த்தியத்திற்கு ஏற்ப, இயற்றல் ஆம்-(சூதாட்டத்தை)
நடத்தலாம்; (எ - று.)-மற்று - அசை. 

     வேணும்-வேண்டும் என்பதன் மரூஉ: இது, இருதிணைஐம்பால்
மூவிடங்கட்கும் பொதுவான ஒருவகை வியங்கோள் வினைமுற்று.  விடுதி -
சிலநாள் தங்கும் இடம்.  நாணுதல் - மனத்திற் கூச்சங்