கொள்ளுதல்; எனவே, பின்வாங்குதலாயிற்று. மற்று - பிறிது என்னும்பொருளது. (318) | 166. | நீடு கின்ற தரும நீதிநிருப கேள்வி ழைந்து நாம் ஆடு கின்ற சூதில் வெற்றி யழிவுநம்மி லொக்குமால் வாடு கின்ற மிடியர் போல வஞ்சமென்று ரைத்துநீ ஓடு கின்ற தொட்டு கின்றரெவண்பொ ருட்கு லோபியோ. |
(இ -ள்) (தருமனை முன்னிலையாக்கிச் சகுனி பின்னுங்கூறுவான்,)- நீதி நீடுகின்ற தரும நிருப - நீதிமிக்க தருமராஜனே! கேள் - (நான் சொல்வதைக்) கேட்பாயாக:-நாம் விழைந்து ஆடுகின்ற சூதில் - நாம் விரும்பி ஆடப்போகின்ற சூதாட்டத்தில், வெற்றி அழிவு - வெற்றியும் தோல்வியும், நம்மில் ஒக்கும் - நம்மிருவர்க்கும் சமமானவையேயாம்; நீ-,வஞ்சம் என்று உரைத்து-(சூதாட்டம்) வஞ்சகத்தை யுடையதென்று சொல்லி, வாடுகின்ற மிடியர் போல ஓடுகின்றது - வாடி வருந்துகின்ற தரித்திரர்போல் அஞ்சியோடுவதற்குக் காரணம், ஒட்டுகின்ற ஒள் பொருட்கு உலோபியோ - பந்தயம்வைத்தற்கு உரிய சிறந்தபொருளுக்கு உலோபியாயிருப்பதோ? (எ - று.)-ஆல் - அசை. இதுவும், அடுத்த கவியும், சகுனி தருமனை முன்னிலைப்படுத்திக் கூறியன. சூதாடுகையில் வெற்றி தோல்விகள் ஒருதலை யன்றாதலால், நம்மிருவருள் அவை யார்க்கேனும் உண்டாகலாம்; ஆகையால், நான் வஞ்சனை வழியால் உன்பொருளைக் கவர்தற்குச் சிறிதும் வழியில்லையே! அப்படியிருக்க, பந்தயம் வைக்கப் பொருளில்லாத வறியவன்போல் நீ பின்வாங்கிச் செல்வானேன்? நீ உலோபியோ? என்று, தருமனுக்குச் சூதாட்டத்தில் ஆவேச முண்டாகுமாறு சகுனி மேன்மேலும் கூறுவானாயினான். மிடி-வறுமை. அதனையுடையவர் - மிடியர். ஒட்டுதல்-பந்தயம் வைத்தல். லோபீ-வடசொல்; செல்வத்தை இறுகப் பிடிக்குந்தன்மையுள்ளவன். இனி, உலோபி-லோபஞ்செய்து எனினுமாம். (319) | 167. | யானெ றிந்த கவறு வெல்லினிசைவெ னக்கி ழத்திநீ தானெ றிந்த கவறு வெல்லினதினி ரட்டி தருகுவன் தேனெ றிந்து தேனு கர்ந்து தேனெடுக்கு மாலையோய் ஆனெ றிந்த கொலைஞர் போலவஞ்சல் வருதி யாடவே. |
(இ -ள்) தேன் எறிந்து தேன் நுகர்ந்து தேன் எடுக்கும் மாலையோய் - வண்டுகள் மோதித் தேனைக்குடித்து (க் கூட்டிற் கொண்டு சேர்த்தற்காக)த் தேனையெடுத்துக்கொண்டு போகப் பெற்ற மலர் மாலையை யணிந்த தருமராசனே!-யான் எறிந்த கவறு வெல்லின் - நான் உருட்டியாடிய கவற்றிற் சயித்தால், இசைவு எனக்கு இழத்தி - (நீ) பந்தயமாக உடன்பட்டு வைத்த பொருளை (எனக்கு)த் தோற்பாய்; நீ தான் எறிந்த கவறு |