பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 308

கொடுஞ்சொற்கள்) கூறுவானாயினான்; (எ - று.)-அவற்றை அடுத்த கவியிற்
காண்க.

    இருக்கவும் உரைத்தனன் என இயையும்.  உதிட்டிரன் = யுதிஷ்டிரன்:
போரிற் பின்வாங்காது உறுதியாய் நிற்பவன் எனக் காரணப்பொருள்படும்.
உதிட்டிரன்னிருக்கவும், னகரமெய் - விரித்தல். மாறு - மாறானசொற்களுக்கும்,
மாற்றார்க்கும் பண்பாகு பெயர். வாகையென்னும் மரத்தின்பெயர்,
அதன்மலரினா லமைக்கப்பட்ட மாலைக்கு இருமடியாகுபெயர்: இது, போரில்
வெற்றி கொண்டவர் அணிவது. விசயனும், உம்மை-இறந்தது தழுவியது;
"மோதுபோரிலெங்ஙனுய்தி யிளைஞரோடு முடுகுதேர், மீதுபோ
யுன்னகரிதன்னின் விரைவினெய்துக" என்று அடுத்த செய்யுளில் வருகின்ற
கர்ணன் வார்த்தை தருமபுத்திரனுக்கேயன்றி அருச்சுனனுக்கும் மனவருத்தத்தை
யுண்டாக்கக்கூடிய தாதல் காண்க.  கொல் - அசை; (பகைவரைக்) கொல்கின்ற
என வினைத்தொகையாய், கர்ணனுக்கு அடைமொழியாகவுமாம்.  'சொல்'
என்பதும் பாடம்.  கன்னனென்னு மன்னன் - பிராசம்.            (321)

169.-கர்ணன் வார்த்தை.

போது போகு மாறி ருந்துபொருதும் வருதி யென்னவுஞ்
சூது போரு மஞ்சி யேதொ லைந்துளந்து ளங்குவாய்
மோது போரி லெங்ங னுய்தியிளைஞ ரோடு முடுகுதேர்
மீது போயுன் னகரி தன்னின்விரைவி னெய்து கென்னவே.

இதுவும், அடுத்த கவியும் - குளகம்.

     (இ-ள்.) (கர்ணன் தருமபுத்திரனை நோக்கி), போது போகும் ஆறு இருந்து
பொருதும் வருதி என்னவும் - 'பொழுது இனிது கழியும்படி இருந்து சூதாடுவோம்
வருவாயாக' என்று (துரியோதனன் உன்னை) அழைக்கவும், (நீ), சூது போரும்
அஞ்சியே உளம் தொலைந்து துளங்குவாய் - சூதாடுதற்கும் அஞ்சி மனம்
வருந்தி நடுங்குகின்றாய்; (இப்படி சூதுபோர்க்கே மனம் வருந்தி நடுங்குகின்ற
நீ), மோது போரில் - (ஆயுதங்களால்) தாக்கிச் செய்யப் படுகின்ற போரிலே,
எங்ஙன் உய்தி - எவ்வாறு பிழைப்பாய்? (இவ்வாறு ஒருவகைப் போர்க்கும்
தகுதியற்ற நீ), இளைஞரோடும் - உன் தம்பிமார்களோடும், முடுகு தேர்மீது
போய் - விரைந்து செல்லுகின்ற தேரின்மீது ஏறிப்போய், உன் நகரிதன்னின் -
உனது (இந்திரப்பிரத்த) நகரத்தில், விரைவின் எய்துக - விரைவிலே
சேர்வாயாக, என்ன - என்றுகூற,- (எ - று.)- 'விசயன் வில்லெடுத்தனன்' என
அடுத்த கவியோடு தொடர்ந்து முடியும்.

    பிராணாபாயத்திற்குச் சிறிதும் இடமில்லாது செல்வக் கேட்டிற்குமாத்திரம்
இடமான இவ்விளையாட்டுச் சூதுக்கே அஞ்சிப் பின்வாங்குகிற நீ
செல்வக்கேட்டோடு பிராணாபாயத்திற்குங் காரணமான மோதுபோரைத்
தைரியத்தோடு செய்யத் திறமற்றவ