| னென்பது திண்ணம்; இவ்வாறு நீ க்ஷத்திரிய தருமமாகிய இருவகைப் போரிலும் பின்வாங்குவதனால் இவ்வரச மண்டபத்தில் நில்லாது உனக்கு ஏற்ற தம்பிமாரோடு ஊரிற்புக்கொளித்துக் கொண்டிருத்தலே நினக்குத் தகுதியென ரோஷமுண்டாகுமாறு தருமனை நோக்கிக் கர்ணன் கூறினனென்க. 'துளங்குவாய்' என்பதை விளியாகவும், முன்னிலையொருமை வினையாலணையும் பெயராகவுங் கொள்ளலாம். (322) 170.-அருச்சுனன் கர்ணன் மீதுவெகுண்டு கூறி எய்ய வில்லெடுத்தல். இல்லெ டுத்து விரகி னோடுமெமைய ழைத்து மாயைகூர் வல்லெ டுத்து வருத லான்ம றுத்த னன்ம கீபனுஞ் சொல்லெ டுத்து வைத வாய்துணிப்ப னென்று கன்னன்மேல் வில்லெ டுத்த னன்பொ றாமல் வீர வாளி விசயனே, |
(இ -ள்.) வாளி வீரம் விசயன் - அம்புசெலுத்தி வீரங்காட்டுகின்ற அருச்சுனனானவன்,-(கர்ணனை நோக்கி), 'விரகினோடும் - (எங்களை) ஏமாற்றும் உபாயத்துடனே, இல் எடுத்து-(புதிதாக மண்டபங்கட்டி, எமை அழைத்து - (மண்டபங்காணவேண்டுமென்ற வியாசத்தினால்) எங்களை வரவழைத்து, மாயை கூர் வல் எடுத்து வருதலால் - மிக்க மோசத்திற்கு இடமான சூதாடு கருவியை (ஆடுமாறு) எடுத்துக்கொண்டு வருதலினால், மகீபனும் மறுத்தனன் - (எனது தமையனான) யுதிஷ்டிரராஜனும் (வேண்டா என்று) தடுத்துக் கூறினான்; (இதனால், அத்தருமன் போர்க்கு அஞ்சியவனாவது எப்படி)? சொல் எடுத்து வைத வாய் துணிப்பன் - தகாத சொற்கொண்டு (க்ஷத்திரிய தருமத்திற் சிறிதும் பின்வாங்காதவனான எனது தமையனைப்) பழித்த (உனது) நாவைத் துணித்துவிடுவேன்,' என்று-, பொறாமல் - மனம் பொறாமல் [உக்கிரத்துடனே], கன்னன்மேல் வில் எடுத்தனன் - கர்ணன்மேல் (அம்பு தொடுக்குமாறு) வில்லைக் கையிலேந்தினான்; 'சொல் எடுத்து வைத வாய் துணிப்பன்' என்பதற்கு - தருமபுத்திரனது பேச்சை யெடுத்துக்கொண்டு வைத நாவைத் துணிப்பேன் என்றும் கூறலாம். வாய்-நாவுக்கு இலக்கணை. (323) 171.-தருமன்அருச்சுனனையடக்கிச் சூதாட உடன்படுதல். ஏதி லாரி னெம்பி நீயி ருக்கவென்றி ருத்திமுன் காதி லாரென் னுடன்மு னைந்துகண்வி ழிக்க வல்லபேர் ஓதி லாண்மை குன்று மென்றுருத்தெ ழுந்து மாயநின் சூதி லாடல் புரிது மென்று தருமனுந்தொ டங்கினான். |
(இ -ள்.) (அப்பொழுது), தருமனும் - தருமபுத்திரனும், (அருச்சுனனை நோக்கி), 'எம்பி - எனது தம்பியே! நீ-, ஏதிலா |