பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 310

ரின் - யாதொரு சம்பந்தமுமில்லாத அயலார்போல, இருக்க - சும்மா
இருப்பாயாக;' என்று - என்றுசொல்லி, முன் இருத்தி - தன் எதிரில் (அவனை)
அடங்கியிருக்கச் செய்து,-(பிறகு), 'காதில் - (நான்) போர்புரிவேனானால்,
என்னுடன் முனைந்து கண் விழிக்க வல்ல பேர் ஆர் - என்னோடு
எதிர்த்துநின்று அஞ்சாமற் போர்புரிய வல்லமையுள்ள வீரர் யாவருளர்?
(ஆயினும்), ஓதில் - (எம்மைக்குறித்து யாமே) புகழ்ந்து கூறினால், ஆண்மை
குன்றும் - வீரத்தன்மை குறைந்துபோகும்; (ஆகையால் ஒன்றும்
கூறவேண்டியதில்லை)', என்று - என்றுஞ் சொல்லி, (அப்பால்), உருத்து
எழுந்து - ரோஷங்கொண்டு எழுந்து, (சகுனியைநோக்கி),-'நின் மாயம் சூதில்-
உனது வஞ்சகத் தன்மையுள்ள சூதாட்டத்தை, ஆடல் புரிதும் - ஆடுவோம்,'
என்று - என்று கூறி, தொடங்கினான் - (சூதாடத்) தொடங்கிவிட்டான்;
(எ -று.)

     தருமன் 'யான் போர்த்திறமையில்லாமற் சும்மாவிருக்கிறேனென்று
நினையாதே; யான் போர்புரியத்தொடங்கினால் எனக்கு முன் அஞ்சாது
எதிர்நின்று பொருபவர் ஒருவரு மிலர்: ஆயினும், நமது ஆண்மையை நாமே
சிறப்பித்துக்கொள்வது இழிவாகுமென்று நினைத்தே நான் அமைந்திருக்கிறேன்.
ஆதலால், நீயும் இவ்வாறு அமைந்திருப்பதே தகுதி எனக்கூறி அருச்சுனனை
அடங்கியிருக்கச் செய்து, பின்னும் தமக்கும் துரியோதனாதியர்க்கும்
வாக்குவாதம் நிகழாதவாறு சூதுபோரையே தொடங்கிவிட்டனனென்பதாம்.
'காதி லா ரென்னுடன் முனைந்து கண்விழிக்க வல்ல பே ரோதி
லாண்மைகுன்றும்' என்று தருமன் கூறியதை, கீழ்க் கர்ணன் கூறிய சூதுபோர்
மோதுபோர் என்ற இரண்டையும் பற்றிய வீரவாதமாகக் கொள்ளினுமாம்.
"தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர், நன்னீர் சொரிந்து
வளர்த்தற்றால், தன்னை, வியவாமை யன்றே வியப்பாவது' என்பவாதலால்,
'ஓதிலாண்மை குன்றும்' எனப்பட்டது.

    எம்பி-என்தம்பியென்பதன் மரூஉ; அண்மைவிளியாதலின் இயல்பாயிற்று.
இருக்க - வியங்கோள் வினைமுற்று.  'காதில் காது என்ற
வினைப்பகுதியினடியாகப் பிறந்த எதிர்காலவினையெச்சம். கண்ணிமைத்தல்
அச்சக்குறி யாதலால், கண்விழித்தலென்பது , இலக்கணையால், அதற்குமாறாக
அச்சமின்மையைக் குறிக்கும்.  ஆடல்-'ஆடு' என்ற முதனிலையின்
தொழிற்பெயர்.  புரிதும்-சகுனியையுளப்படுத்திய தன்மைப்பன்மை; தும்-
தன்மைப்பன்மைவினைமுற்று விகுதி: இங்கு எதிர்காலங்காட்டிற்று.  சூதில் -
உருபுமயக்கம்.  முன்-கால முன்னுமாம்.                           (324)

172.-துரியோதனன்சகுனிக்காகத் தான்
பந்தயம்வைக்க உடன்படுதல்
,

நின்னை வெல்லி னொட்டம் யாவுநீகொ டுக்க நீயிவன்
றன்னை வெல்லின் யான்விரைந்து தருவ னென்று தருமனைப்
பின்னை வெல்லொ ணாதெ னப்பி ணிப்பு டன்ம ருட்டினான்
மின்னை வெல்லும் வெய்ய சோதி வேலி ராச ராசனே.