பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 311

     (இ -ள்.) மின்னை வெல்லும் சோதி வெய்ய வேல் இராசராசன்-
மின்னலைச் சயித்து விளங்குகின்ற ஒளியையுடைய கொடிய வேலாயுதத்தைக்
கொண்டுள்ள அரசர்க்கரசனான துரியோதனன்,-(தருமபுத்திரனை நோக்கி),-
'நின்னை வெல்லின் - (இந்தச் சகுனி) உன்னைச் சயித்தால், ஒட்டம் யாவும் -
பந்தயங்களெல்லாவற்றையும், நீ கொடுக்க - நீ (எனக்குத்) தரக்கடவை; நீ-
,இவன் தன்னை வெல்லின் - இந்தச் சகுனியைச் சயித்தால், (அப்பொழுது),
யான் விரைந்து தருவன் - யானே விரைந்து (எனது  பொருள்களை உனக்குக்)
கொடுக்கடவேன்', என்று-என்று (பந்தயம் வைப்பதில்) நியமஞ்செய்து,-பின்னை
தருமனை வெல்ல ஓணாதுஎன - '(ஆனால்) இனித் தருமபுத்திரனைச்
(சூதாட்டத்திற்) சயிக்கமுடியாது' என்று சொல்லி, பிணிப்புடன் மருட்டினான் -
(சூதாடும்படி தருமனுக்கு மனத்தில்) உறுதியான எண்ணம் உண்டாகுமாறு
மதிமயங்கும் சொற்களையுங் கூறினான்; (எ - று.)

     தருமன் சூதாடுகையில் அவனுக்கு எதிராகத் தன் பொருட்டுச் சகுனி
சூதாடுவனென்பது, துரியோதனனது வார்த்தையின் கருத்து.  'தருமனைப்
பின்னைவெல்லொணாது' என்று சூதாட்டத்தில் தருமபுத்திரனுக்கு மிக்க
திறமுள்ளதாகத் துரியோதனன் புகழ்ந்து கூறியது, அத்தருமன் சூதாடுதலில்
மிக்க உற்சாகங்கொண்டு பின்வாங்காமல் மேல்விழுந்து சூதாடுதற்கு வருமாறு
அவனைத் தூண்டுதற் பொருட்டென்க. தருமனை முன்னிலையாக்கிச் சில
கூறியவன் பின்பு உடனே அவனைப் படர்க்கையாக்கி இது கூறினான்.

     ஒட்டம் - பந்தயமாக வைக்கப்படும் பொருள்; அம்-
செயப்படுபொருள்விகுதி; கொடுக்க - வியங்கோள் வினைமுற்று.  இவன்
தன்னை, தன் - சாரியை.  தருவன் - தன்மையொருமைவினைமுற்று.
வெல்லொணாது - வெல்லவொன்றாது என்பதன் மரூஉ.  வெய்ய - 'வெம்மை'
என்ற பண்புப்பகுதியின், குறிப்புப்பெயரெச்சம்.  ராஜராஜன் - துரியோதனனுக்கு
ஒருபெயர்.  'வேல்' என்பது - உபலக்ஷணத்தால், பலவகை ஆயுதங்களையுங்
குறிக்கும்.                                                    (325)

173.-தருமனும் சகுனியும் சூதாடும்பொருட்டு
ஆசனத்திலிருத்தல்
,

அவிர்ப சும்பொன் மீளி யாளியாசனத்தி ழிந்துபூந்
தவிசி லொன்றி டப்பு குந்துதருமன் வைக மாமனும்
நவிர றுந்தி சைப்பு றத்துநன்னி லங்கு றித்துநீள் 
புவிபெ றுங்க ருத்தி னோடி ருந்தனன்பொ ருந்தவே.

     (இ -ள்.) தருமன்-, அவிர் பசும்பொன் மீளி யாளி ஆசனத்து இழிந்து -
விளங்குகின்ற பசும்பொன்மயமான வலிய சிங்கந்தாங்குவதாகச் செய்யப்பட்ட
சிங்காதனத்தினின்று இறங்கி, பூந்தவிசில் ஒன்றிட புகுந்து வைக -
அழகியதோர் ஆசனத்திற் பொருந்தித் தங்கியிருக்க, மாமனும் -
(துரியோதனனது) மாமனாகிய சகுனியும்,-நீள் புவி பெறும் கருத்தினோடு -
(தருமபுத்திர