னது) பெரிய இராச்சியத்தை அடைய வேண்டுமென்ற எண்ணத்துடன், நல் நிலம் குறித்து-வெற்றித் தானத்தை ஆராய்ந்தறிந்து, நவிர் அறும்திசைப் புறத்து - குற்றமற்ற அத்திக்கின் பக்கமாக, பொருந்த இருந்தனன்-;(எ - று.) தருமபுத்திரன் சூதாடுமாறு தான் முன்னிருந்த மிக்க உயரமான சிங்காதனத்தினின்றும் இறங்கி ஓராசனத்தில் முதலில் தங்கியிருக்க, சகுனி தருமபுத்திரனது இராச்சியத்தைக் கவர வேண்டுமென்ற எண்ணத்தினால் அவன் தோல்வியடையும்படி தான் வெற்றித்தானத்தை அறிந்து அத்திசைப்புறமாகத் தங்கியிருந்தனனென்றவாறு. வாதிபிரதிவாதிகளாக இருவர் மாறுபட்டுத் தொழில் செய்யும் பொழுது தாம் இருவரும் இருக்கும் நில வெல்லையைச் சதுரமாகவும், அச்சதுக்கத்தில் மேஷம் முதலிய பன்னிரண்டு ராசிகளும் முறையே இருப்பனவாகவும், கொண்டு, எதிரியுள்ள இடத்திற்குத் தானுள்ள இடம், 4, 7, 9, 11 - இத்தானங்களுள் ஒன்றாய் அமையுமாறு இருந்து தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பது சோதிட நூல்களிற் காண்க. (326) 174.-தருமபுத்திரனும் சகுனியும்சூதாடத் தொடங்குதல். கவள யானை பணையில் யாளிகால்வ குத்த பலகையிற் பவள மான நீல மான கருவி முன்பரப்பினார் தவள மான கவறுகை தரித்து மெய்தரித்ததார் துவள மான நிருபர் தம்மி லாடவேதொ டங்கினார், |
(இ -ள்.) மானம் நிருபர் - பெருமையையுடைய (தருமன் சகுனி என்ற) அரசரிருவரும்,-கவளம் யானை பணையில் - கவளத்தையுண்ணுகின்ற யானையின் தந்தத்தாற் செய்யப்பட்டதும், யாளி கால் வகுத்த - சிங்கத்தின் உருவந் தோன்றச் சித்தரித்த கால்களையுடையதுமாகிய, பலகையின் - (காய்களை நிறுத்துமாறு அறைகள் அமைந்துள்ள) பலகையின் மேல், பவளம் ஆன நீலம் ஆன கருவி - பவளநிறமாயும் நீலநிறமாயுமிருக்கிற காய்களை, முன் பரப்பினார் - முன்னே பரப்பிவைத்தவர்களாய்,-தவளம் ஆன கவறு கை தரித்து - வெண்ணிறமான பாச்சிகைகளைக் கையிற்கொண்டு, மெய் தரித்த தார் துவள - (தமது) உடம்பிலணிந்துள்ள மாலைகள் புரண்டசைய, தம்மில் ஆடவே தொடங்கினார் - தங்களில் ஆடத் தொடங்கினார்கள்; (எ - று.) சிங்கந்தாங்கிய கால்கள் அமைந்ததாய் யானைத் தந்தங் கொண்டு செய்யப்பட்ட அறை கீறிய சூதுபலகையின் மேல் ஒரு பக்கத்திற் செந்நிறமான காய்களையும் மற்றொருபக்கத்தில் நீல நிறமான காய்களையும் பரப்பித் தருமனும் சகுனியும் வெண்ணிறப்பாச்சிகை கொண்டு உருட்டி ஆடத்தொடங்கின ரென்க: தன்மைநவிற்சியணி. ஆடுகையில் மாலையசைதல், இயல்பு. 'யானைப்பணை' என்பது, ஓசைநயம்நோக்கி, 'யானை பணை' என இயல்பாய் நின்றது. கருவி-காய்கள். கவறு-பாச்சிகை. பவளம்- ப்ரவாளம் என்ற வடசொல்லின் விகாரம், பவளமான நீலமான கருவி யென் |