| பதற்கு - பவழத்தாற் செய்யப்பட்டவையும் நீலரத்தினத்தாற் செய்யப்பட்டவையுமான காய்க ளெனினும் அமையும். (327) 175.-இதுமுதல் ஐந்து கவிகள் -தருமன் பல பொருள்களையும் சூதாடியிழந்தமையைக் கூறும், ஈரம் வைத்த சிந்தை மன்னனிசைவெ னக்க ழுத்தின் முத்து ஆரம் வைத்து நீயு மாற ழைக்க வென்ன மாமன் மேல் வாரம் வைத்த நெஞ்சி னானும்வருக வென்று மாமணிச் சாரம் வைத்த வலய மொன்று தானு முன்னர் வைக்கவே. |
இரண்டு கவிகள் - ஒரு தொடர். (இ -ள்.) ஈரம் வைத்த சிந்தை மன்னன் - அருள்கொண்ட மனத்தையுடையவனான யுதிஷ்டிரராசன், கழுத்தின் முத்து ஆரம் இசைவு என வைத்து - (தான்) கழுத்திலணிந்திருந்த முத்து மாலையைப் பந்தயமாக வைத்து, (துரியோதனனை நோக்கி,) நீயும்மாறு அழைக்க என்ன - 'நீயும் இதற்கு எதிரான பந்தயத்தை வருவித்து வைப்பாயாக' என்று சொல்ல,-மாமன்மேல் வாரம் வைத்த நெஞ்சினானும்-மாமனாகிய சகுனியிடத்து அன்புகொண்ட மனத்தையுடையவனாகிய துரியோதனனும், சாரம் மாமணி வைத்த வலயம் ஒன்று வருக என்று - 'சிறந்த பெரிய இரத்தினமிழைத்துச் செய்யப்பட்ட ஒரு தோள்வளையைக் கொண்டுவா' என்று (ஒருவனை) ஏவி (வரவழைத்து), தானும்-, முன்னர் வைக்க - (தருமபுத்திரனுக்கு) எதிரிலே (பந்தயமாக) வைக்க,- (எ - று.)-'மாமன்வெல்ல' என, அடுத்த கவியோடு குளகமாகத் தொடரும். இசைவு - மனமிசைந்துவைத்த பந்தயத்துக்கு ஆகுபெயர். ஸாரம் - வடசொல்; சிறந்ததென்பது பொருள். வலயம் - பாஹு வலயம். (328) | 176. | இருவ ருங்க வற்றி னாலெறிந்த போதெ றிந்தவாறு ஒருவ ருங்கு றிக்க லாவு பாயமாயி ருத்தலான் மருவ ரும்பு யத்த லங்கன் மாமன்வெல்ல மன்னருள் வெருவ ருங்க ளிற்றி னானு மேல்வி ருப்ப மிஞ்சினான். |
(இ -ள்.) இருவரும்-(தருமன் சகுனி என்ற) இருவரும், கவற்றினால் எறிந்தபோது - பாச்சிகையை யுருட்டியாடுகையில்,-மருவரும் அலங்கல் புயத்து மாமன்-வாசனை வீசுகின்ற மலர்மாலையையணிந்த தோள்களையுடைய சகுனி, எறிந்த ஆறு-(பாச்சிகையை) உருட்டியாடிய வகை, ஒருவரும் குறிக்கலா உபாயம் ஆய் இருத்தலான் -எவரும் தெரிந்துகொள்ள முடியாத தந்திரமாயிருந்ததனால், வெல்ல- (அத்தருமபுத்திரனைச்) சயித்துவிட, மன்னர்உள் வெருவரும் களிற்றினானும்-பகையரசர்கள் மனத்தில் அஞ்சுதற்குக் காரணமான யானைச்சேனையையுடையவனாகிய தருமபுத்திரனும், மேல் விருப்பம் மிஞ்சினான் - மேன்மேலும் சூதாடுதலில் ஆசை மிக்கவனானான்; (எ- று.) |