என்ற எண்ணத்தினால் அவ்வாறு நிறுத்திவிடாதிருக்கும்படி 'பாண்டவர்களாகிய தங்களையே பந்தயப் பொருளாக வைக்குமாறு கேட்பாய்' எனச் சகுனிக்குக் குறிப்பாகக் கூறினனென்க. எய்த்த அ கோவையும் என்று பிரித்து - சூதாடித்தோற்ற அந்தத் தருமராசனையும் என்றும் உரைக்கலாம். ஈவை - இவையென்பதன் 'நீட்டல்; (இதன் ஒருமையாகிய 'இது' என்பது 'ஈது' எனச்சுட்டு நீண்டுவருதல் கருதத்தக்கது.) பாண்டவர்களைப் பந்தயப்பொருள்களாகக் கொண்டதனால், 'ஈவை' என அஃறிணையாகக் கூறினார். எய்த எய்த - அடுக்கு, மிகுதிப்பொருளது. பாண்டவர்களது பொருள்களையே யன்றி அவர்களின் நாசத்தையும் எனப்பொருள்படுவதால், 'வீவையும்' என்ற உம்மை-இறந்தது தழுவிய எச்சப்பொருளது. வீவு - தொழிற்பெயர்; வீ - பகுதி, வு - தொழிற்பெயர் விகுதி. (333) 181.- தருமன்தங்களையே பந்தயப்பொருளாகக்கொண்டு ஆடித் தோற்க, சகுனி மீண்டு்ங் கூறுதல். உன்னை யுங்கு றித்து வன்புரைத்த தம்பி மாரினந் தன்னை யுங்கு றித்தி சைந்துதருக வந்து பொருகெனப் பின்னை யுங்கு றிப்பு றாதுபொருது கைபி ழைக்கமேல் என்னை யுங்கு றிப்பெ னாமுன்விரகி னாலி யம்பினான். |
(இ -ள்.) (சகுனி தருமனை நோக்கி), 'உன்னை குறித்துஉம் - உன்னையே பந்தயப்பொருளாக வைத்தும், வன்பு உரைத்த தம்பிமார் இளந்தன்னை குறித்துஉம் - சாமர்த்தியம் பேசின தம்பிமார் கூட்டத்தையும் [நான்கு தம்பிமார்களையும்] பந்தயப் பொருளாக வைத்தும், இசைந்து தருக - மன மொப்பி நியமனஞ் செய்வாயாக; வந்து பொருக - வந்து சூதாடுவாயாக,' என - என்று (துரியோதனனது எண்ணத்தின்படியே) சொல்ல,-பின்னையும் - (பல பொருள்களையுந்தோற்ற) பின்பும், (தருமராசன்), குறிப்பு உறாது - சிறிதும் ஆலோசனை யில்லாமல், பொருது - (தங்களையே பந்தயப் பொருளாகக் கொண்டு சகுனியுடனே) சூதாடி, கைபிழைக்க - (தங்களையும்) தோற்க,-மேல் - அதன்பின்பு, (சகுனி), முன் - (தருமராசனுக்கு) எதிரில், உம் குறிப்பு என்னை எனா - 'உமது எண்ணம் இனி என்ன?' என்று (இகழ்ச்சிதோன்றக்) கூறி, விரகினால் இயம்பினான் - தந்திரமாக (மற்றும்) சொல்வானாயினான்; (எ - று.)- அதனை, அடுத்தகவியிற் காண்க. 'எல்லாப் பொருள்களையும் தோற்றுவிட்டதோடு உங்களையும் தோற்றுவிட்டதனால், இனி ஆடும்பொருள் ஒன்றுமில்லையே!' என்று இகழ்ச்சி தோன்றுமாறு கூறி, மற்றும் ரோஷத்துடன் திரௌபதியையும் பந்தயம் வைக்குமாறு கூறுகின்றானாதலால், 'விரகினாலியம்பினான்' என்றார். மேல் உம் குறிப்பு என்னை எனா முன் விரகினால் இயம்பினான் என்பதற்கு-'இனி உமது கருத்து என்ன?' என்று (தருமன்) கேளாதமுன்னமே [கேட்காதிருக்கையிலேயே] (சகுனி) வஞ்சனையினால் (வலியச்) சொல்பவ |