பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 321

184.

திருகு நெஞ்சின் வஞ்சராகி யிளைஞர் தீமைசெய்தகால்
உருகு கின்ற தாதை நீயுடன்ப டுத்தி ருப்பதோ

மிருக மன்று பறவை யன்றிரக்க மின்றி மேவுநின்
அருகு வந்த ணைந்த தெங்களறிவி லாமை யாகுமே.

     (இ - ள்.) இளைஞர் - (உனது) மைந்தர்கள், திருகும் நெஞ்சின் வஞ்சர்
ஆகி - மாறுபாடுகொண்ட மனத்திலே வஞ்சனைக் கருத்தையுடையவர்களாய்,
தீமை செய்த கால் - (பாண்டவர்கட்குப்) பொல்லாங்கு செய்தபொழுதில்,
உருகுகின்ற தாதை நீ - (அப்பாண்டவரிடத்து உண்மையன்புக்கு)
உருகுபவன்போலப் பாவனைகாட்டுகிற பெரிய தந்தையாகிய நீ, உடன்படுத்து
இருப்பதோ - (அப்பொல்லாங்குக்குச்) சம்மதித்திருப்பது தகுதியோ? மிருகம்
அன்று - (நீ) மிருகமுமல்லை; பறவை அன்று - பறவையுமல்லை;  இரக்கம்
இன்றி மேவும் நின் அருகு வந்து அணைந்தது - (மனிதனாயிருந்தும்)
இரக்கமில்லாமலிருக்கிற உனது சமீபத்தில் [நாங்கள் வந்து சேர்ந்திருப்பதற்குக்]
காரணம், எங்கள் அறிவு இலாமை ஆகுமே - எங்களது
புத்தியில்லாமையேயாம் [உன்மீது குற்றஞ் சொல்வதிற் பயனில்லை யென்றபடி];
(எ - று.)

     நீ இருதிறத்துப் புதல்வரிடத்திலும் பட்சபாதமில்லாமல் ஒரு நிகராக
இருந்து நியாயப்படி செல்ல வேண்டியிருக்க, அவ்வாறு நடவாமல்
பகுத்தறிவில்லாத மிருகபட்சிகள் போலச் சிறிதும் விவேகமின்றி இரக்கங்
கொள்ளாதிருப்பதனால், நாங்கள் உன்னைச் சேர்ந்திருப்பது எங்களது
அறிவீனமேயாகும் என்று தம்மைப் பழித்துக் கூறும்முகத்தால் விதுரன்
திருதராட்டிரனைப் பழித்தனனென்க.  இச்செய்யுளி னீற்றடி - ஒருவரது
நிந்தையால் மற்றொருவரது நிந்தையை வெளிப்படுத்துகிற
வஞ்சப்பழிப்பணியின்பாற்படும்.  மிருகம் அன்று பறவை அன்று என்பதற்கு
- (இவ்வாறு இரக்கங் கொள்ளாமலிருப்பது) மிருகங்களினியற்கையுமன்று,
பட்சிகளினியற்கையுமன்று [மிருகபக்ஷிகளும் இரக்கங்கொள்ளுகின்றன] எனப்
பொருள் கூறுவாருமுளர்.  செய்தகால் - பெயரெச்சத்தொடர்: ஆதலின், வலி
இயல்பு.  பறப்பது - பறவை; ஐ - வினைமுதற்பொருள்விகுதி.  ஓகாரம் -
எதிர்மறை.  ம்ருகம் - வடசொல்.  'எங்கள்' என்ற தன்மைப்பன்மை, வீடுமன்
முதலிய நல்லோர் பலரை உளப்படுத்தியது.                   (337)

185.பின்பி றந்த தம்பிமைந்தர் பீட ழிந்தி ரங்கவே
முன்பி றந்த தமையன் மைந்தர்மொய்ம்பி னால டர்ப்பரோ
அன்பி றந்த தேனு நீதி யழியநீந டத்தினால்
என்பி றந்து முடியு மண்ணிலெண்ணில் கால மின்னுமே.

     (இ - ள்.) பின் பிறந்த தம்பி மைந்தர் பீடு அழிந்து இரங்க-பின்னே
பிறந்த தம்பியினது புதல்வர்கள் [பாண்டவர்கள்] (முழுவதுந்தோற்றதனாற்)
பெருமைகெட்டு வருந்தும்படி, முன் பிறந்த தமையன் மைந்தர் மொய்ம்பினால்
அடர்ப்பரோ-முன்னே பிறந்த