பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 327

என்ற அடுக்கு - இழிப்புப் பற்றியது.  மறல்=மறம்; கொடுமை.
அதனையுடையவனென யமனுக்குக் காரணக்குறி.  ஓகாரம் - தற்குறிப்பேற்றவுருபு.
தருமமும், உம்மை - உயர்வுசிறப்பு. ஓகாரம் - எதிர்மறையோடு இரக்கப்
பொருளது.  வீமன் - செய்யுமென்முற்று, ஆண்பாலுக்கு வந்தது;  [நன் -
வினை 29.] எழுமோ, ஓகாரம் - ஊகித்தற் பொருளது.                  (344)

192.பாந்தளே றுயர்த்த வேந்தன்பார்த்தில னுறவு மென்பார்
மாய்ந்தவே யறமுந் தேசு மனுநெறி வழக்கு மென்பார்
பூந்தழற் பிறந்த பாவைபுண்ணியம் பொய்யா தென்பார்
சேந்தன னிருகண் பாரீர்தேவர்கோன் மதலை யென்பார்.

     (இ -ள்.) (சிலர்), - 'பாந்தள் ஏறு உயர்த்த வேந்தன் - சிறந்த பாம்பின்
வடிவமெழுதிய கொடியை உயரவெடுத்தவனாகிய துரியோதனன், உறவும்
பார்த்திலன் - (பாண்டவர்கட்கும் தனக்கும் உள்ள) உறவுமுறையையும் சிறிதும்
எண்ணினானில்லை', என்பார்-; (சிலர்), அறமும் தேசும் மனுநெறி வழக்கும்
மாய்ந்த - 'தருமமும் நன்குமதிப்பும் மநுதர்மசாஸ்திரத்திற் கூறிய நெறிப்படியே
நடத்தலும் (தருமனுக்குப்) பயன்தாராதொழிந்தன,' என்பார்-: (அவற்றைக்கேட்ட
சிலர்), பூ தழல் பிறந்த பாவை புண்ணியம் பொய்யாது - 'அழகிய
யாகாக்கினியிற் பிறந்தவளாகிய சித்திரப் பிரதிமை போன்ற (அழகையுடைய)
திரௌபதியினது பதிவிரதா தருமம் தவறாது [எதிரிகளை அழித்தே விடும்],'
என்பார்-; (சிலர்), தேவர் கோன் மதலை - 'தேவேந்திரனது குமாரனாகிய
அருச்சுனன், இருகண் சேந்தனன் - (கோபத்தால் தனது) இரண்டுகண்களும்
சிவக்கப்பெற்றான்; பாரீர் - (இதனைப்) பாருங்கள்,' என்பார்-; (எ - று.)

    துரியோதனன் சகுனியைக் கொண்டு மாயச்சூதினால் தருமபுத்திரனது
பொருள்களெல்லாவற்றையுங் கவர்ந்து கொண்டதுமன்றி, அப்பாண்டவர்களை
மனைவியுடனே தனக்கு அடிமையாகவுஞ் செய்தன னாதலால், 'பாந்தளே
றுயர்த்தவீரன் பார்த்திலன் உறவும்' என்றார்.  இனி இரண்டாமடிக்கு - அறமும்
தேசும் மனு நெறிவழக்குமுடைய பாண்டவர்கட்கு இவ்வாறு பெருந்தீங்கு
சம்பவித்ததனால், இனி உலகத்தில் அறம் முதலிய நற்பொருள்கள்
நிலைநில்லாது அழிந்தேவிடு மெனக் கருத்துக் கூறலுமாம்; அறம் முதலியன
துரியோதனனிடத்துச் சிறிதும் இல்லையாயினவென்றுங் கருத்துக்கொள்ளலாம்.

    திரௌபதியை 'பூந்தழற்பிறந்தபாவை' என்றதன் விவரம்:- குருகுல
குமாரர்கட்கு வில்லாசிரியனாகிய துரோணன் தன்மாணாக்கனான
அருச்சுனனைக்கொண்டு பாஞ்சாலதேசத்தரசனான துருபதனைப்
பேரவமானப்படுத்த, அதனால் துரோணன்மீது மிக்க வைரங்கொண்ட
அத்துருபதன் அவனைக்கொல்லுதற்கு ஒரு மகனையும், அருச்சுனனது
திறமையைக் கண்டு வியந்ததனால்