பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 330

வினைப்பயன் தானோ! (அல்லது), அந்த பொது மகள் யாகசாலை நண்ணிய
தவறோ - (ஐவருக்கும்) பொதுவான மனைவியாகிய அந்தத் திரௌபதி
(தருமபத்தினியாக) யாகசாலையிற் சென்றிருந்த குற்றந்தானோ! (அல்லாமல்),
மற்றை நால்வரும் தகைமை கூர எண்ணிய மதியோ - (தருமனொழிந்த வீமன்
முதலிய) மற்றைத் தம்பியர் நால்வரும் பெருமிதம் மிகுதியாகத்தோன்ற(த்
தங்களை) மதித்த எண்ணந்தானோ! இங்ஙனம் விளைந்தது - இவ்வாறு (முற்றுந்
தோற்கும்படி) பலித்துவிட்டது!' என்றான் - என்று துரியோதனன் தனது வெற்றி
தோன்றக் கூறினான்; (எ - று.)

    தண்ணிய தருமன் - தண்மையை [குளிர்ந்த அருளை] யுடைய தருமன்
எனினுமாம்.  தரும புத்திரன் செய்த ராசசூய யாகத்திற்குத் தான் சென்றபோது
மயனாற்சமைக்கப்பட்ட பளிங்கு மண்டபத்தில் தடுமாறிய தன்னை,
திரௌபதியும் வீமன் முதலிய நால்வரும் சிரித்துப் பரிகசித்தது தன்
மனத்திலுறுத்த, துரியோதனன் அது காரணமாகவே இப்படிச் சூதாடி
வெல்லுமாறு ஆலோசித்தனனாதலால், திரௌபதியையும் வீமன் முதலிய
நால்வரையும் இவ்வாறு இகழ்ந்து கூறினனென்க.  திரௌபதி
பாண்டவரைவர்க்கும் உரிய மனைவியா யிருப்பதுகொண்டு, அவளை,
வேசையென்று பொருள்படுகின்ற 'பொதுமகள்' என்ற பெயரினால் இழித்துக்
கூறினான்.  ஓகாரங்கள் - விகற்பப் பொருளன.                    (348)

196.-வீடுமன் நீதிகூற,கேளாமல் துரியோதனன்
கோபம் மிகுதல்
,

தகாமொழி தலைவன் கூறத்தவத்தினா லுயர்ந்த கோவும்
நகாமர பியற்கை யன்று நம்மினாம் புன்மை கூறல்

மிகாதினி நிகழ்ந்த செற்றம்விடுகெனச் செவியிற் சற்றும்
புகாதுளம் வெகுளி கூரப் புரிந்தனன் போத மில்லான்.

     (இ- ள்.) தலைவன் - துரியோதனராசன், தகா மொழி கூற -
(இவ்வாறு) தகாத வார்த்தைகளை யெடுத்துச் சொல்ல, தவத்தினால் உயர்ந்த
கோவும் - தவத்தினாற் சிறந்த வீடுமனும், நகா - பரிகசித்து, 'நம்மில் நாம்
புன்மை கூறல் - நமக்குள் நாமே (ஒருத்தர் மேல் ஒருத்தர்) இழிவாகச்
சொல்வது, மரபு இயற்கை அன்று - (நமது) குலத்திற்குத் தகுதியன்று; நிகழ்ந்த
செற்றம் இனிமிகாது விடுக - இப்பொழுது உண்டான கோபத்தை இனிமேலும்
வளராதபடி விட்டுவிடுவாயாக,' என - என்று (நன்மதி) சொல்லவும்,-போதம்
இல்லான் - அறிவில்லாதவனாகிய துரியோதனன், செவியில் சற்றும் புகாது -
(அவ்வார்த்தைகள் தனது) காதுகளிற் சிறிதும் நுழையாமல், உளம் வெகுளி கூர
புரிந்தனன் - மனதிற் கோபத்தை மிகுதியாகக் கொண்டான்; (எ - று.)

    பாண்டவர்களும் நமது குலத்தைச் சேர்ந்தவராதலின், அவர்களை
இழித்துக் கூறுதல் தகுதியன்றென்பது, இரண்டாமடியின்