| (இ-ள்.) தொல்லை மாநகரும் நாடும்-(நமது) பழைமையாகிய பெரிய நகரங்களிலும் நாடுகளிலும், தோரணம் நாட்ட-தோரணங்கட்டி யலங்கரிக்கும்படி, சொற்றி-; எல்லை இல் நிதிகள் எல்லாம்- (பாண்டவர்களுடைய) அளவில்லாத எல்லாச் செல்வங்களையும், இம்பரே - இவ்வத்தினாபுரிக்கே [இப்பொழுதே], எடுக்க - எடுத்து வரும்படி, சொற்றி-; நல் எழில் மடவார் தம்மை - (தருமன் பந்தயமாகக் குறித்து இழந்த) நல்ல அழகையுடைய மகளிர்களையெல்லாம், நம் பதி எய்த - நமது அத்தினாபுரியில் வந்து சேருமாறு, சொற்றி-; சொல்லிய இளைஞர் தாமும் - (தருமன் பந்தயமாகக் குறித்துக்) கூறிய (வீமன் முதலிய அவனது) தம்பிமார் நால்வரையும், தொண்டினர் ஆக - (நமக்கு) அடிமைகளாகுமாறு, சொற்றி-; (எ- று.) நாடு நகரங்களைத் தோரணங்கட்டி யலங்கரிக்கச் சொன்னது, தான்பெற்ற வெற்றியைக் கொண்டாடுதற் பொருட்டென்க. இம்பர் - இரட்டுறமொழிதல். துரியோதனன், தனக்கு மூத்தோனாகிய தருமனை அடிமையாகச் சொல்வதற்கு வாய்கூசி, இளைஞராகிய வீமன் முதலியோரையே தொண்டினராக்கச் சொல்லினன்; அன்றியும், துரியோதனன் தான் ராஜசூயயாகத்திற்குச் செல்லுகையிற் பளிங்கு மண்டபத்தில் இடறிவிழுந்தபோது தன்னைப் பரிகசித்த வீமன் முதலிய நால்வரிடத்தே மிக்க கறுக்கொண்டுள்ளா னென்பதையும் அறிக. இனி, இளமையையுடைய வீரரென்று பாண்டவரைவரையுமே குறித்ததாகக் கொள்ளலுமாம். தொல்லை-பண்புப் பெயர்; ஐ - விகுதி. தோரணம், நிதி - வடசொற்கள். (351) | 199. | இவர்தமக் குரிய ளாகியாகபத் தினியுமான துவரி தழ்த் தவள மூரற் சுரிகுழ றன்னை யின்னே உவரலைப் புணரி யாடை யுலகுடைவேந்தர் காணக் கவர்தரப் புகறி யென்றான் கண்ணருள் சிறிது மில்லான். |
(இ -ள்.) இவர் தமக்கு உரியள் ஆகி - இப்பாண்டவரைவர்க்கும் உரிய மனைவியாகி, யாகபத்தினியும்ஆன-ராஜசூயயாகத்திற்கு உரிய பத்தினியாகவும் அமைந்த, துவர் இதழ் தவளம் மூரல் சுரி குழல் தன்னை - பவழம்போலச் சிவந்த அதரத்தையும் வெண்மையாகிய பற்களையும் நுனி சுருண்ட கூந்தலையுமுடைய திரௌபதியை, அலை உவர் புணரி ஆடை உலகு உடை வேந்தர் காண - அலைகளையுடைய உவர்க்கடலை ஆடையாகக் கொண்ட இந்நிலவுலகத்தின் அரசர்கள் காணுமாறு, இன்னே-இப்பொழுதே, கவர்தர- வலியப்பிடித்து இழுத்துக்கொண்டு வரும்படி, புகறி-கட்டளை கூறுவாய், என்றான்-;(யாவனெனில்,-) கண் அருள் சிறிதும் இல்லான் - கண்ணோட்டஞ் சிறிதுமில்லாதவனாகிய துரியோதனன்; ஐவர்க்கும் பொதுமகளாயுள்ளவள் யாகபத்தினியாகக்கொள்ளுதற்குச் சிறிதுந் தக்கவளல்ல ளென்பான், அத்திரௌபதிக்கு 'இவர் தமக்குரியளாகி யாகபத்தினியுமான' என அடைமொழி கவளமூரற்சுரிகுழல் -அன் |