பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 339

படும்.  மான்- இங்கு, உவமவாகுபெயர்.  முன்னிடை கடையொன்றின்றி -
முன்னும் நடுவும் பின்னுமாகிய சந்ததிகளிலொன்று மில்லாமல். 'சாற்றியத்தளர்வு
தீர்த்தான்' என்பதும் பாடம்.                                      (359)

207.அந்தவன் றிகிரி யானுநம்மிலோ ரரச னாகி,
வந்தவ தரித்தா னென்று மண்ணெலாம் வார்த்தை யானது,
எந்தவல் வினையா லெவ்வா றெய்துமென் றிதற்கே சால,
நொந்துகண் டுயில்பெ றாதே நோதகப்புரிந்தேன் மன்னோ.

     (இ -ள்.) 'அந்த வல் திகிரியானும் - அவ்வாறு அருளிச் செய்த வலிய
சக்கராயுதத்தையுடையவனான திருமாலும், நம்மில் ஓர் அரசன் ஆகிவந்து
அவதரித்தான் - நமக்குள்ளே ஓரரசனாக வந்து பிறந்திருக்கிறான்,' என்று-,
மண் எலாம் வார்த்தை ஆனது - உலக முழுதும் வதந்தி உண்டாயிருக்கின்றது;
எந்த வல்வினையால் எ ஆறு எய்தும் - எந்தக்கொடிய தீச்செயலினால் என்ன
தீங்கு நேரிடுமோ? என்ற இதற்கே-என்ற இது பற்றியே, சால நொந்து -
மிகவும் மனம்நொந்து, கண் துயில்பெறாது - கண்ணுறங்குவது மின்றி, நோதக
புரிந்தேன் - வருந்திக் கொண்டிருக்கிறேன்; (எ - று,)-மணன், ஓ -
ஈற்றசைகள்.

    'துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலனஞ் செய்தற்பொருட்டே தேவகியின்
வயிற்றிற் கண்ணனாய்த் திருவவதரித்த திருமால் இவ்வாறு
பலமுறைகேடுகளைப்புரியும் உன்னை யழிப்பது திண்ணம்; இதுபற்றியே, யான்
அல்லும் பகலும் கவல்கின்றேன்' என்ற விஷயத்தை விதுரன்
சிறிதுமறைபொருளாகக் கூறினனென்க.  இங்கு 'திகிரியான்' என்றது - தவறாது
கொடியவர்களை யழிப்பானென்ற கருத்தையுட்கொண் டிருத்தலால்,
கருத்துடை யடைகொளியணியாம். கடவுட்டன்மையையுடைய திருமால்
மனிதனாகப் பிறந்தானாதலால், 'அவதரித்தான்' என்றார்.  அவதாரமென்பது -
உயர்ந்த நிலையிலிருப்பவன் தனது சங்கற்பத்தால் தாழ்ந்த நிலைக்கு
வருதலைக் குறிக்கும். என்றிதற்கே - தொகுத்தல்.                    (360)
 

208.ஒருதிறத் தவனி முற்றுமொருமையாற் புரக்கு நீவிர்
இருதிறத் தவரு  நும்மி லிகலுறு மனத்தி ரானால்
வருதிறத் தானை வேந்தர்வகைபடக் குழுஉக்கொண் டோடிப்
பொருதிறப் பதற்கே சற்றும்புரிவிலீர் புரிகின் றீரே
.

     (இ -ள்.) சற்றும் புரிவு இலீர் - சிறிதும் ஆலோசனையில்லாதவர்களே!-
அவனி முற்றும் - பூமிமுழுவதையும், ஒரு திறத்து ஒருமையால் புரக்கும் -
ஒருபகுதியாக ஒற்றுமையால் அரசாளுதற்கு உரிய, நீவிர் இருதிறத்தவரும் -
நீங்கள் இரண்டு திறத்தாரும், நும்மில் இகல் உறு மனத்திர் ஆனால் -
உங்களுக்குள்ளே பகைமை கொண்ட மனமுடையவர்களானால், வரு திறம்
தானை வேந்தர் - (உங்களிரு திறத்தார்க்கும் துணையாக) வருகின்ற
நால்வகைப்பட்ட சேனையையுடைய அரசர்கள், வகைபட குழுஉக்கொண்டு -
அணி