| (இ -ள்.) பெருந் தகை ஏவலோடும்-பெருந்தன்மையையுடையவனான துரியோதனன் கட்டளையினால், பிராதிகாமியும்-,அங்கு ஏகி-(திரௌபதியிருக்கிற) அவ்விடத்திற்குப் போகத்தொடங்கி, வருந்திய மனத்தன் ஆகி - (திரௌபதியைப்பற்றிய அந்தத் துரியோதனன் கட்டளைக்கு) வருந்திய மனமுடையவனாய், மாசு அறு மரபின் வல்லி இருந்த உழி எய்துறாமல்- குற்றமற்ற நல்ல குலத்திற் பிறந்த பூங்கொடி போன்றவளான திரௌபதி இருந்த இடத்திற் செல்லாமல், இடைவழி நின்று-நடுவழியிற் சற்று நேரம் நின்று, மீள விரைந்தனன் ஓடி வந்து - திரும்பவும் விரைந்தோடி வந்து, வேந்தனுக்கு ஏற்ப சொன்னான்-துரியோதனராசனுக்கு 'இவன் சொல்வது உண்மையே' என்று எண்ண முண்டாகும்படி கூறுவானாயினான்; (எ - று.)-அதனை, அடுத்த கவியிற் காண்க. பிராதிகாமியானவன் துரியோதனன் கருத்தின்படி அக்கிரமஞ் செய்தற்கு அஞ்சித் திரௌபதியினிடஞ் செல்லாமலே திரும்பித் தனது ஆலோசனையினாற்கற்பனை செய்து கேட்டோர் நம்புமாறு சிலவார்த்தை கூறலாயின னென்க. பிராதிகாமி இடைவழியிற் சற்றுநேரம் நின்றது, திரௌபதியினிடம் போய்வருவதற்கு உரிய காலங் கழிவதற்பொருட்டு, துரியோதனனை 'பெருந்தகை'என்றது, இகழ்ச்சி. பெருமையாகிய தகுதியையுடையவ னென, இச்சொல்-அன்மொழித்தொகை. 'ஏவலோடும்' என்றவிடத்து, 'ஓடு' உருபு-கருவிப்பொருளில் வந்தது. (363) வேறு. 211.-பிராதிகாமியின்வார்த்தை. என்னைத் தோற்று மனுநெறிகூரிசையோன் றன்னைத் தோற்றனனோ, தன்னைத் தோற்றுத் தனதுமனத் தளர்வா லென்னைத் தோற்றனனோ, முன்னைத் தோற்றுத் தோற்றபொருண் முற்றுங் கவரு முறையன்றிப், பின்னைத் தோற்ற பொருள்கவரப் பெறுமோ நினைக்கப் பெறாதென்றாள். |
இதுவும், அடுத்த கவியும் - ஒருதொடர். (இ -ள்.) 'மனு நெறி கூர் இசையோன் - மநுதர்மசாஸ்திரத்திற் கூறியபடி ஒழுகுவதனால் மிக்க கீர்த்தியுடையவனான தருமபுத்திரன், என்னை தோற்று - (முன்னே சூதில்) என்னை (ப்பந்தயமாகவைத்து)த் தோற்றிழந்து, தன்னை தோற்றனனோ - (பிறகு) தன்னை(ப் பந்தயமாக்கி)த் தோற்றிழந் தானோ? (அன்றி), தன்னை தோற்று - (முதலிலே) தன்னைத் தோற்றுவிட்டு, (பிறகு), தனது மனம் தளர்வால் என்னைத் தோற்றனனோ - தனக்கு நேர்ந்த மனவருத்தத்தினால் என்னை (ப்பந்தயமாக்கி)த் தோற்றிழந்தானோ? முன்னை தோற்று தோற்ற பொருள் முற்றும் கவரும் முறை அன்றி - முதலில் (சூதாட்டத்தில்) தோல்வியடைந்து இழந்த பொருள்களையெல்லாம் (வென்றவர்கள்) கவர்ந்துகொள்ளும் |