பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 343

ஐவர்க்கு - பாண்டவரைவர்க்கும் (பொதுவாக), ஒருத்தி ஆகிய-தானொருத்தியே
மனைவியாயிருக்கின்ற, அ மல்லல் பானல் விழியாளை - வளமுள்ள
கருங்குவளை மலர்போன்ற கண்களையுடையவளாகிய அத்திரௌபதியை, மன்
பேர் அவையின் அழை-அரசர்கள் நிறைந்துள்ள (இந்தப்) பெரிய சபையில்
(இப்பொழுது) அழைத்து வா,' என்றான் - என்று கட்டளையிட்டான்; (எ - று.)

    ஐவர்க்கும் பொதுவான மனைவியாயிருக்கிற அவள் பலபேர் கூடிய
ராஜசபையில் நாணமின்றி வருதற்கு உரியவளே யென்பான், 'ஐவர்க்கும்
ஒருத்தியாகிய அம்மல்லற்பானல் விழியாளை மன்பேரவையின் அழை'
என்றான்.  செல்வப்பாவை - செல்வத்தில் பிறந்து செல்வத்தில் வளர்ந்து
செல்வத்தில் வாழ்க்கைப்பட்ட அருமையான பெண் என்றவாறுமாம்.
துஸ்ஸாஸனன் - கொடிய கட்டளையையுடையா னெனப் பொருள்படும்
வடசொல்.  துச்சாதனனை முகம் நோக்கி - துச்சாதனனைமுகத்தைப் பார்த்து
என இரண்டு செயப்படுபொருள் வந்த செய்வினை.  இனி துச்சாதனனை
முகத்தின்கண் நோக்கி யென்றாவது, (உருபுமயக்கமாகத்) துச்சாதனனது
முகத்தை நோக்கி யென்றாவது கொள்வது, தமிழ்நடை. "முதலை ஐ யுறிற்
சினையைக் கண்ணுறும், அது முதற்காயின் சினைக்கு ஐயாகும்".  பான்மை-
விதி.  மல்லல் - வளப்பமுணர்த்தும் உரிச்சொல்; "மல்லல் வளனே" என்பது
தொல்காப்பியம். பானல் - நீலோற்பலம்: அதன் மலர்க்கு, முதலாகுபெயர்.  
                                                        (365)

213.-துச்சாதனன்திரௌபதியிருந்த இடத்தை
அணுகிக் கூறத் தொடங்குதல்
.

நோன்றாள் வெங்கட் கடகளிற்றுநுழைவே லரச னுவற லுமே,
ஆன்றார் கேட்கிற் செவிபுதைக்கு மழல்கால் வெஞ்சொ
                                       லறனில்லான்,
தோன்றா நயனத் துணைவனைப்போற் றுணைக்கண் டுகிலிற்
                                      சூழ்ந்திருந்த,
ஈன்றா ளில்லத் திருந்தாளை யிகலோடெய்தியிவைசொல்வான்
.

     (இ -ள்.) நோன் தாள் வெம் கண் கடம் களிறு நுழை வேல் அரசன் -
வலிய கால்களையும் கொடுமையையும் மதநீர்ப் பெருக்கையுமுடைய
யானைகளினுடம்பில் தைத்துச்செல்லுந் தன்மையுள்ள வேலாயுதத்தை
யேந்தியவனாகிய துரியோதனன், ஆன்றார் கேட்கின் செவி புதைக்கும் அழல்
கால் வெம்சொல் - பெரியோர் கேட்டால் காதுகளைப் பொத்திக்கொள்ளுதற்குக்
காரணமானதும் நெருப்பைக் கக்குவதுபோன்றதுமான கொடிய கட்டளைச்
சொல்லை, நுவறலுமே - சொன்னவுடனே,-அறன் இல்லான் - தருமநெறி
சிறிதுமில்லாதவனாகிய துச்சாதனன்,-தோன்றா நயனம் துணைவனை போல் -
தெரியாத கண்களையுடைய [குருடனான] (தனது) கணவனாகிய
திருதராட்டிரனைப்போலவே, துணைகண் துகிலின் சூழ்ந்து இருந்த-தனது
இரண்டு கண்களையும் வஸ்திரத்தினாற் சுற்றிக் கட்டிக்கொண்டு தானும் குருட்டுத்
தன்மையை அடைந்திருக்கின்ற, ஈன்றாள் - (தனது) பெற்றதாயாகிய காந்