பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 344

தாரியினது, இல்லத்து - அந்தப்புரத்திலே, இருந்தாளை - இருந்தவளாகிய
திரௌபதியை, இகலோடு எய்தி - மனக்கறுவுடனே சென்று கிட்டி, இவை
சொல்வான் - இவ்வார்த்தைகளைக் கூறுவானாயினான்; (எ - று.)-அவற்றை
அடுத்த மூன்று கவிகளிற் காண்க.

     இனி, முதலிரண்டடிகளில், அரசன் நுவறலும் வெஞ்சொல்லையுடைய
அறனில்லான் என்று நேராகவே கூட்டிப் பொருள் கொள்ளலுமாம்.
திருதராட்டிரனுக்கு மணஞ் செய்வித்தற் பொருட்டு வீடுமன் இட்ட
கட்டளையினால் தூதர் காந்தாரதேசத்து அரசனான சுபலனிடத்திற் சென்று
அவன் மகளாகிய காந்தாரியைத் திருதராட்டிரனுக்குத் தரும்படி மணம் பேச,
அச்சுபலனும் திருதராட்டிரன் கண்ணில்லாதவனாயினும் அவனது
நற்குடிப்பிறப்பையும் புகழையும் நல்லொழுக்கத்தையும் ஆராய்ந்து மணம்நேர,
காந்தாரி தனது சுற்றத்தார் மூலமாகத் தனது தாய் தந்தையர்
திருதராட்டிரனுக்குத் தன்னை அளிக்க நிச்சயித்திருப்பதையும் அவன்
கண்ணில்லாதவ னென்பதையும் கேட்டறிந்து, விதியினாற் கிடைத்த அக்
கணவன் திறத்தில் மனமுவந்தவளாய்ப் பதிவிரதா தருமத்தை மேற்கொண்டு,
கட்புலனால்வரு மின்பத்தைத் தன் கணவன் போலவே தானும்
அனுபவியாதிருத்தல் வேண்டி ஆடையை பலமடிப்பாக மடித்து அதனால் தன்
கண்களை மறைத்துக் கட்டிக்கொண்டு கண்பார்வை யிலளாயின ளென்பது
வரலாறு.  வெம் கண்-பயங்கரமான கண்க ளெனினுமாம்.  'களிற்று நுழை
வேல்' என - வேலின் மிக்க கூர்மையை விளக்கியவாறாம்.  நுவறலும் -
நுவல்-பகுதி, து, அல்-சாரியைகள், உம் வினையெச்ச விகுதி: மற்றவை - சந்தி.
ஈற்றடி - முற்றுமோனை.                                      (366)

214.-இதுமுதல் மூன்றுகவிகள் -துச்சாதனன் வார்த்தை.

தானே சூது பொருதழிந்து தலைவன்றனக்குன் பதியான,
கோனே சொல்லி யாவையுமுன் கொடுத்தான் கொடுத்த
                                    பின்னிசைவு,
யானே யென்றும் வீமன்முத லிளையோ ரென்று மென்வேள்வி,
மானே யென்றுங் குறித்திழந்தான் வழக்கால் வென்றோம்
                                   வருவாயே
.

     (இ -ள்.) உன் பதி ஆன கோனே-உனது கணவனாகிய தருமபுத்திரனே,
தானே சூது பொருது அழிந்து-தானாகவே சூதாடித் தோற்று, தலைவன்
தனக்கு-அரசனாகிய துரியோதனனுக்கு, சொல்லி யாவையும் முன்
கொடுத்தான்-பந்தயமாகக் குறிப்பிட்டு எல்லாப்பொருள்களையும்
முதலிற்கொடுத்துவிட்டான்; கொடுத்தபின்-(அவ்வாறு எல்லாப் பொருள்களையும்
தோற்றுக்) கொடுத்த பின்பு - இசைவு-(தான்) மனமொப்பிய பந்தயப்பொருள்,
யானேயென்றும்-, வீமன் முதல் இளையோர் என்றும் - வீமன் முதலிய
தம்பிமார் நால்வரு மென்றும், என் வேள்வி மானே என்றும் - எனது
யாகபத்தினியாகிய திரௌபதியேயென்றும், குறித்து - குறிப்பிட்டுவைத்து,
இழந்தான்-(எல்லாரையும்) இழந்து