(இவனது) மனம் இரும்புதானோ?' என்பார்-; (சிலர்), 'பெரும்போர் அரசர்- மிக்க போர்த்திறத்தையுடைய அரசர்கள், பெண்ணுடனே பிறந்துஉம் - பெண்ணுடனே பிறந்தவர்களாயிருந்தும், சீற பெறார்-(இக்கொடுமையைச் செய்யுந் துரியோதனாதியர் திறத்திற்) சிறிதுஞ் சினங்காட்டாதிருக்கின்றார்களே!' என்பார்-; (சிலர்), போர் பொரும் வீமன் பொறுத்தாலும் - போர் செய்யும் வலிமையுள்ள வீமசேனன் (மாறுசெய்யாது ஒருகால்) பொறுத்துக் கொண்டிருந்தானானாலும், பொன் தேர் விசயன் பொறான்-அழகிய தேரினையுடைய அருச்சுனன் சிறிதும் பொறுக்கமாட்டான், என்பார்-; (சிலர்), 'அரும்போர் அரசர் தகாது என்றால் - அருமையான போர்த்திறத்தையுடைய (இச்சபையிலுள்ள) அரசர்கள் '(இவ்வாறு சூதாடுதல்) தக்கதன்று' என்று மறுத்துக் கூறியிருந்தால், இந்த அழிவுவருமோ - இந்தக் கேடு நேரிடுமோ?' என்பார்-; (எ - று.) 'மாமன்' என்றது-திரௌபதிக்கு மாமனார் முறையான திருதராஷ்டிரனை. இளமையிலே தந்தையையிழந்த பாண்டவர்கள் திறத்திலே திருதராஷ்டிரன் பேரன்புகொண்டு பாதுகாத்து வந்து அவர்களை மிக்கச் சிறப்பினராகுமாறு செய்திருந்தும், இப்போது ஒருபால் அன்பு ஓடிக் குணக்கேடரான தனது மைந்தர்க்கு வசப்பட்டு அவர்களது துராலோசனைகட்கெல்லாம் தான் உடந்தையாய் நின்று தருமாத்துமாக்களான அப்பாண்டவர்களைச் சூதாடுமாறு புரிந்து இதனோடு நில்லாமல் மருமகளான திரௌபதியைத் தனது மக்கள் பேரவமானஞ் செய்வதை அறிந்த பிறகும் தடுக்காமல் அதற்கும் உடன்பட்டதனால், அவனது மனத்தை 'இரும்போ' எனப்பழித்துக் கூறினார். 'இ மா மனிதற்கு' என்று பிரித்துப் பொருள் கொள்ளுதலு மொன்று. ஆணோடு பெண்ணோடு பிறக்க வில்லையா என்பது உலகவழக்கு. தான் தனியே ஒருத்தனாகப் பிறந்தவன் பிறரது கஷ்ட நிஷ்டூரங்களை யறிதல் அருமை; பலருடன் பிறந்தவர்களோ தம்மோடு குடல்துவக்குடைய உடன் பிறந்தார்க்கு வருத்தம் நேர்ந்தபொழுது அது தமது மனத்திற்பதிய வருந்துவார்களாதலால், அத்தகையார் பிறர்க்குத் துன்பம் நேர்ந்தவிடத்தும் அப்பிறரது கஷ்டநிஷ்டூரங்களையும் உணர்தற்கு வல்லவராவர். அத்தன்மையர்பலர் கூடியிருக்கும் இச்சபையிலே இயல்பிற் சுதந்திரமற்றுத் தனக்கு நேரும் துன்பத்தை நீக்கிக்கொள்ளும் வல்லமையில்லாத பெண்ணாய்ப் பிறந்துள்ள திரௌபதியை ஒருமூடன் இவ்வாறு வருத்துகையில் மாறாகச் சீறித்தமது பலத்தால் இவ்வக்கிரமத்தைத் தடுக்கவேண்டியிருக்க, இவர்கள் ஒன்றுஞ் செய்யாது அடங்கி வாளாவிருக்கின்றார்களே! இதென்ன விபரீதம் என்பது இரண்டாமடியின் கருத்து. திரௌபதி பெண்ணாதலால், 'ஆணோடு பிறந்தும்' என்பதைத் தவிர்த்து 'பெண்ணுடனே பிறந்தும்' என்று கூறினார்கள்; இது - உலகவழக்குநவிற்சியணி. 'பெரும் போரரசர்', என்றது மாறுசெய்ய வல்லவர் என்ற கருத்தை யுட்கொண்டது; கருத்துடையடைமொழியணி. இனி இரண்டாமடிக்கு - பெரிய போர்த் தொழிற்கு உரிய துரியோதனாதியர் தாங்களும் ஒரு பெண்ணுடன் பிறந்தவர் |