கூந்தலுக்கு மேகமும், அக்கூந்தலிற் சூடியுள்ள மலர்மாலைக்கு மேகத்தில் தோன்றிய மின்னலும் உவமைகளா மெனக் காண்க. முதலடி - உருவகத்தை அங்கமாகக்கொண்ட உவமையணியும்,இரண்டாமடி-இல்பொருளு வமையணியுமாம். தார்-மின், குழல் - மேகம் என முறையே சென்று இயைவது - முறைநிரனிறைப்பொருள்கோள்; இதனை, அணிநூலார், முறைநிரனிறையணியென்பர். மனம் வெதும்பும்போது உடம்பும் வெதும்புமாதலால், 'மெய்சுட' என்றார். கோ கோவென்று - இரக்கவொலிக் குறிப்பிடைச்சொல். (384) 232.- துச்சாதனன் கூறியகடுமொழி. மன்வந் திருந்த சங்கத்துன்மாம னிருந்தா னைவருமுன், முன் வந்திருந்தார் முன்கொண்ட முறையான் முயங்கு முடிவேந்தர், மின்வந்தனைய நுண்ணிடையாய் விழிநீர் சொரிந்து மெலிய வுனக்கு, என்வந்ததுகொல் பொதுமகளிர்க் கரிதோ விழிநீ ரெளி தென்றான். |
(இ -ள்.) (அப்பொழுது துச்சாதனன் திரௌபதியை நோக்கி), 'மின் வந்து அனைய நுன் இடையாய்-மின்னல் வந்து பொருந்தினாற் போன்ற நுண்ணிய இடையையுடையவளே! மன் வந்து இருந்த சங்கத்து-(பல அரசர்கள்) வந்து கூடியுள்ள இச் சபையில், உன் மாமன் இருந்தான்-உனது மாமனாராகிய திருதராட்டிரன் இருக்கின்றான்; (அன்றியும்), முன் கொண்ட முறையால் முடி வேந்தர் ஐவரும் - முன்னே (உன்னை) விவாகஞ் செய்து கொண்ட முறைப்படியே (உன்னைத்) தழுவுகிற கிரீடாதிபதிகளான பாண்டவரைவரும், உன்முன் வந்து இருந்தார் - உன்னெதிரில் வந்திருக்கின்றார்கள்; (இவ்வாறு உன்னைத்சேர்ந்தவர்கள் அருகிலிருக்கையில்), விழி நீர் சொரிந்து மெலிய உனக்கு என் வந்தது கொல் - கண்ணீர் சொரிந்து அழும்படி உனக்கு (இப்பொழுது) என்ன கதியின்மை நேரிட்டதோ? (ஒன்றும் நேரவில்லையாதலால் அழக் காரணமில்லையே!) பொது மகளிர்க்கு- (பல- ஆடவரும் இன்பநுகருமாறு) பொதுவாயிருக்கின்ற வேசையர்க்கு, விழிநீர் - (நினைத்தபோதே) கண்ணீர் (பெருக்குதல்), அரிதோ, அருமையானதோ? எளிது-எளிமையானதே,' என்றான்-; (எ - று.) இங்கு உனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் உன்னை அவ்வாபத்தினின்றும் பாதுகாப்பதற்கு உனது மாமனாரும் உனது கணவர்களும் இருக்கையில், நீ புலம்பி வீணே பாசாங்கு செய்ய வேண்டா எனத் துச்சாதனன் கடுமையாகக் கூறினனென்க. 'உன்மாமன்' என்றது, விதுரனை என்றலுமாம். வற்புறுத்துதற்கு, 'அரிதோ? எளிது,' என வினாவும் விடையுமாகிய இரண்டு வாய் பாட்டாலுங் கூறினான். பாண்டவரைவரும் திரௌபதிக்கு ஓரோராண்டு ஓரொரு தலைவராய்க் கொழுநராயினமையால், 'முறையால் முயங்கு முடிவேந்தரைவரும்' என்றான். திரௌபதி காரணமின்றி அழுகின்றா ளென்னுஞ் சிறப்புப் பொருளை 'பொதுமகளிர்க்கு |