பயனிலையாகக் கொண்டுமுடியும். புகலீர் - உடன்பாட்டு ஏவற்பன்மை வினைமுற்று. (390) | 238. | முறையோ வென்றென்றவனிதல முழுது முடையான்முடித்தேவி, நிறையோ டழிந்து வினவவுநீர் நினைவுற் றிருந்தீர் நினைவற்றோ, இறையோன் முனியு மெனநினைந்தோ விருந்தாலுறுதி யெடுத்தியம்பல், குறையோ கண்கண் டதுநாளுங் குலத்துப்பிறந்தோர் கூறாரோ. |
(இ - ள்.) அவனி தலம் முழுதும் உடையான் - இந்நிலவுலகம் முழுவதற்கும் உரியவனான தருமபுத்திரனது, முடி தேவி-பட்ட மகிஷியாகிய திரௌபதி, முறையோ என்று என்று - '(என்னை அடிமை யெனக்கொண்டு இவ்வாறு சபையிலிழுத்துவருவது), முறைமை யாகுமோ?' என்று பலதரஞ்சொல்லி, நிறையோடு அழிந்து வினவவும்-(தன்மனத்தை நல்வழியில்) நிறுத்தின கற்பு நிலைமையோடு மனம் வருந்தி நியாயம் விசாரிக்கவும்,-நீர் நினைவு உற்று இருந்தீர்-நீங்கள் (விடை கூறுவதற்குச்) சங்கைகொண்டிருக்கின்றீர்கள்: (இவ்வாறு நீதிகூறாமலிருத்தற்குக் காரணம்), நினைவு அற்றோ-ஞாபக மில்லாமையினாலோ? (அன்றி), இறையோன் முனியும் என நினைந்தோ-(நியாயம் திரௌபதிக்கே அநுகூலமாயிருத்தல்பற்றி அவளுக்கு அநுகூலமாகக் கூறினால்) துரியோதனராசன் கோபங் கொள்வன் என்று அஞ்சித்தானோ? இருந்தால் உறுதி எடுத்து இயம்பல் குறையோ - நியாயமிருந்தால் உள்ள நியாயத்தை எடுத்துக்கூறுதல் குற்றமாகுமோ? குலத்துப் பிறந்தோர் கண் கண்டது நாளும் கூறாரோ-நல்ல குலத்திற் பிறந்தவர்கள் (தாம்) பிரதியக்ஷயமாய்க் கண்டதை எப்பொழுதும் கூறாது விடுவார்களோ? (எ- று.) என்றது-நற்குலத்திற் பிறந்தவரான அச்சபையிலிருந்த அரசர்களை, துரியோதனனுக்கு அஞ்சி மௌனமாயிராது நீதி கூற வேண்டுவது அவசியமென வற்புறுத்தியவாறு, பாண்டவர் துரியோதனாதியர் ஆகிய நூற்றைவருள்ளும் தருமன் வயதில் மூத்தவனாதலாலும் திக்குவிசயஞ் செய்து ராஜசூயயாகம் முடித்து 'ஸம்ராட்' என்னும் பட்டப் பெயரைச் சூடியவனாதலாலும், 'அவனிதல முழுதுமுடையான்' எனப்பட்டான். நிறை - மகளிர் மனத்தைக் கற்புவழியில் நிறுத்துந் தன்மை. 'நினைவற்றிருந்தீர் நிறைவற்றோ' என்பதும் பாடம். (391) | 239. | தன்னே ரில்லாநெறித்தருமன் றனவென் றுரைக்கத்தக்கவெலாம், முன்னே தோற்றுத் தங்களையு முறையே தோற்றுமுடிவுற்றான், சொன்னே ருரைக்குத் தான்பிறர்க்குத் தொண்டாய்விட்டுச் சுரிகுழலைப், பின்னே தோற்க வுரிமையினாற் பெறுமோவென்று பேசீரோ. |
|