ரது ஆடையை உரியுமாறு துரியோதனன் கூறினான். 'வழக்கு வார்த்தை சொன்ன கிளிமொழி' என்றதனால், அவள் கொடு வழக்கு உரைத்ததற்கு இதுவே பயனென்றவாறாம். கர்ணகடூரமாயிருத்தலாலும், அச்சந்தருதலாலும், பேரொலிபடுதலாலும், துரியோதனன் கட்டளைக்கு இடி உவமை. ஐவரையும், கிளிமொழியினையும், துகிலை உரிதி - இரண்டு செயப்படுபொருள்வந்த செய்வினை. கிளி மொழி - உவமைத்தொகையன்மொழி, உறழ் - உவம வுருபு. இனி, என்று கூறிக் கர்ணன் தான் கோபங்கொண்ட சமயத்தில் (அக்கோபந்தணியுமாறு) துரியோதனனது தம்பியாகிய துச்சாதனனைப் பார்த்து இவ்வாறு கட்டளையிட்டதாகப் பொருள் கூறலுமாம்; துகிலுரியுமாறு கர்ணனே துச்சாதனனுக்குக் கட்டளையிட்டதாக வியாசபாரதம் கூறுதலால், இப்பொருள் சாலும். (397) 245.-சினங்கொண்டவீமார்ச்சுனர்களைத் தருமன் தணித்தல். ்தகவின் மொழிசெவியினெரிவாளி யெனமூழ்க விருந்தவேந்தர், தத்தமன மடிந்துருகத் தருமன்முகமதிநோக்கித்தம்மினோக்கி, வித்தகவெங் கதைநோக்க விறல்வீமன் விசயனுந்தன்வில்லை நோக்க, ஒத்தமன னுடையிளையோ ருருப்பமடக்கினனுண்மைக் குறுதி போல்வான். |
(இ -ள்.) இ தகவு இல் மொழி - தகுதியற்ற இந்தக் கட்டளை வார்த்தை, எரி வாளி என செவியில் மூழ்க-நெருப்புப்பற்றி யெறிகின்ற அம்பு போலத் தங்கள் காதுகளில் நுழைந்து வருத்த,-இருந்த வேந்தர்-அங்கிருந்த அரசர்கள், தம் தம் மனம் மடிந்து உருக-தம் தமது மனம் தளர்ந்து உருகும்போது,- தருமன் முகம் மதி நோக்கி - தருமபுத்திரனது மதிபோன்ற முகத்தைப் பார்த்தும் தம்மில் நோக்கி - தாம் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டும், விறல் வீமன்-பராக்கிரமசாலியான வீமசேனன், வித்தகம் வெம் கதை நோக்க- (தான்) மிகத்தேர்ந்ததாகிய கொடிய (சத்துருகாதிநியென்னுந் தனது) கதாயுதத்தை நோக்கவும்,-விசயனும்-அர்ச்சுனனும், தன் வில்லை நோக்க-(காண்டீவமென்னுந்) தனது வில்லை நோக்கவும்,-(அக்குறிப்பைக் கண்டு),- உண்மைக்கு உறுதிபோல் வான்-சத்தியத்திற்கு ஆதாரம்போல்பவனான தருமபுத்திரன், ஒத்த மனன் உடைஇளையோர் உருப்பம் அடக்கினன் - தன்னோடுமாறுபடாத மனமுடையவர்களான தனது தம்பியரது கோபத்தை (க் குறிப்பால்) தணித்தான்; (எ - று.) தருமனது கருத்தை அறியும்படி அவனது முகத்தையும், 'நாம் என்ன செய்யத் தக்கது? இப்பொழுது பகையைச்சங்கரித்துவிடுவோமா?' என்று ஆலோசிக்குமாறு தம்மில் ஒருவர் மற்றொருவரையும் வீமார்ச்சுனர் நோக்குவாராயினரென்க. ஒத்தமனனுடையோர் உருப்ப மடக்கினன் என்று பிரித்து-ஒத்த கருத்துடையவர்களான நகுலசகதேவர்கள் கோபிக்கவும் (அத்தம்பியர் |