பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 379

பார்த்தும் முடியாமல் தளர்ந்து அச்செயலொழிந்து தரைமேற் கை குவியவும்,
தன்வசந் தப்பிப் பரவசமாய், தத்துவஞானமுதிக்கப் பெற்றவளாதலின்
பர்த்தாக்களாவது பிறதெய்வங்களாவது உதவுவார்களென்ற கருத்தைவிட்டு
'பெரிய ஆபத்காலத்தில் உதவுபவன் திருமாலே' என்று துணிந்து,
அப்பெருமானது திருநாமத்தையே பலதரங்கூவி விளித்து, அவ்வாறு நாமத்தை
உச்சரிக்கும் போது மெய்ப்பாட்டினால் உடம்பு  குளிரப்பெற்று
நாவில்அமிர்தமூற, பக்தியின் மேலீட்டினால் உடல் புளகமுற, மனம் நெக்கு
உருகுவாளாயின ளென்றவாறு.  'மகத்தான ஆபத்து நேருங்காலத்தில்
பகவானாகிய திருமால் தியானிக்கத்  தகுந்தவனென்று வஸிஷ்டமுனிவர்
கூறியுள்ளதை நினைத்துத் திருமாலைக் குறித்துத் திரௌபதி
முறையிடுபவளானாள்' என்று வியாசபாரதம் கூறும்.

    எம்பெருமானுக்குப் பல திருநாமங்களிருக்கவும் கோவிந்தனென்ற
இப்பெயரால் விளித்தது, இந்திரன் விடாப்பெருமழையைப்  பொழிவித்தபோது
தம்மாலும் தம்மைப் பாதுகாத்தற்கு உரிய இடையராலும் காக்க முடியாமல்
தவித்து அலைகிறநிலையிலே பசுக்களையெல்லாம் யாதொரு குறைவுமின்றிக்
கோவர்த்தனமலையைக்கொண்டு உனது பேரருளினாற் காப்பாற்றியது
போலவே, என்னாலும் என்னைப் பாதுகாக்கவேண்டிய பர்த்தாக்களாலும்
பாதுகாக்க முடியாமல் தவித்து அநந்யகதியாய் உன்னையே சரணமாக
நம்பியிருக்கிற என்னை நீ பேரருள்கொண்டு காக்கவேண்டுமென்ற குறிப்பு.
(இனி அரைகுலையத் தலைகுலைய அலமாக்கும் படியாக முடிசூடின
பேரைச்சொல்லிக் கூப்பிடுகிறாள்; 'கோவிந்த-தன் ஆச்ரிதரை நோவுபட
விட்டிருக்கு மவனையோ நான் ஆச்ரயித்தது?' கோவிந்த-நீ
கோவிந்தாபிஷேகம் பண்ணிக் கோப்தாவாயிருக்க, ஒருவர் கூறை
எழுவருக்குப்படி யிருப்பதென்?' 'கோவிந்த - நீ ஆஸ்ரித ரக்ஷணத்திலே
தீக்ஷித்திருக்க, "க்ருஷ்ணா" ஸ்ரயா" என்றிருக்கிற என்னை க்ருபை பண்ணா
தொழிவதென்?" 'கோவிந்த - நாராயணா என்று உன் சிறு பேரையோ நான்
சொல்லிற்று? உன்னிலும் அதிகமான உன்பேரையன்றோ நான் சொல்லிற்று!'
'கோவிந்த - என்னுடைய ரட்சணத்துக்கு மலையெடுக்க வேணுமோ?
கண்ணாலே நோக்க அமையாதோ' என்ற வ்யாக்யான வாக்கியங்கள் இங்குக்
காணத்தக்கன:) கோவிந்தன் - கோ - பசுக்களை, விந்தன்-காப்பாற்றினவன்
என்று பொருள்.

    திருமாலின் திருநாமத்தை உச்சரித்ததனால், இதற்கு முன் கண்டிராத
இனிய ரஸம் நாவிற்சுரப்பதாயிற்று; இதனை "குருகூர் நம்பி யென்னக்கால்,
அண்ணிக்குமமுதூறு மென்னாவுக்கே" "சிந்திக்கத் தித்திக்கும்" என்றாற்போலக்
கொள்க.  ஊறாத அமிழ்தூற - தொடைமுரண்.  'உள்ளம் எலாம்' என்றது,
'வெயிலெல்லாம்' என்றதுபோல வந்த ஒருமைப்பன்மைமயக்கம்; இனி, மனம்
புத்தி சித்தம் அகங்காரம் என்று உள்ளுறுப்பு நான்காதல்பற்றி வந்த
பன்மையாகவுமாம்.  திரௌபதி உள்ளம் உருகினாள் - "உயர்