பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 380

திணை தொடர்ந்த பொருள் முதலாறும், அதனொடுசார்த்தினத்திணைமுடிபின"
என்பது விதி.                                              (400)

248.-கிருஷ்ணபகவான்திரௌபதிக்கு அருள்புரிதல்.

அருமறைசொல் லியநாம மாயிரமு முரைத்தழைக்க வமரர்
                                         போற்றுந்,
திருமலர்ச்செஞ் சீறடியோன் றிருச்செவியி லிவண்மொழி
                               சென் றிசைத்த காலை,
மருமலர்மென் குழன்மானின் மனநடுங்காவகைமனத்தே வந்து
                                         தோன்றிக்,
கரியமுகி லனையானும்பிறரெவர்க்குந் தெரியாமற் கருணை
                                         செய்தான்.

    (இ - ள்.) அமரர் - தேவர்கள், அரு மறை சொல்லிய நாமம் ஆயிரமும்
- அரிய வேதங்களிற் கூறியுள்ள (தனது) ஆயிரந்திரு நாமங்களைக்
கொண்டும், உரை தழைக்க போற்றும் - (தங்கள்) வார்த்தைகள் செழிக்கும்படி
எடுத்துத் துதிக்கப்பெற்றவனான, திருமலர் செம் சிறு அடியோன் - அழகிய
தாமரை மலர்போன்ற சிவந்த சிறிய திருவடிகளை யுடையவனான
கண்ணபிரானது, திருசெவியில் - அழகியகா துகளில், இவள் மொழி சென்று
இசைத்த காலை - இந்தத்திரௌபதியினது ("கோவிந்தா" என்று கதறிக் கூறிய)
மொழி வந்து கேட்டபொழுதில்,- கரியமுகில் அனையானும் - காளமேகத்தை
யொத்த அக்கண்ணபிரானும்,- மரு மலர் மெல் குழல் மானின்-நறுமணம்
வீசுகின்ற மலர்மாலையை யணிந்த மெல்லிய கூந்தலையுடைய
மான்போன்றவளான திரௌபதியினது, மனம்-, நடுங்கா வகை - கலங்காதபடி,
மனத்தே வந்து தோன்றி - (அவளது) மனத்தி லெழுந்தருளிக் காட்சிதந்து,
பிறர் எவர்க்கும் தெரியாமல்-, கருணைசெய்தான் - (மானங்குலையாதபடி
ஆடை வளருமாறு) அநுக்கிரகித்தான்; (எ - று.)

    பரம்பொருளான திருமாலின் அவதாரமாகிய கண்ணபிரான் எங்குமுள
னாதலால், திரௌபதி இரங்கித் தன்னையழைத்த பொழுது அதனைச்
செவியேற்றுத் துவாரகையிலிருந்தபடியே அவளது மனத்தில் வந்து எழுந்தருளி
அருள்புரிந்தன னென்க; இதனை, முதலையின் வாய்ப்பட்ட கஜேந்திராழ்வான்
ஆதிமூலமே யென்று கூவியழைத்தபொழுது திருமால் பரமபதத்திலிருந்து
கொண்டே கருடாரூடனாயும் எழுந்தருளிக் காட்சிதந்து அக்கஜேந்
திராழ்வானுக்கு  அனுக்கிரகித்ததுபோலக் கொள்க.  அருமறை சொல்லிய
நாமமாயிரம்-வேதப்பிரதிபாத்யமான ஸஹஸ்ரநாமங்கள்.  மனத்தே வந்து
தோன்றுதல் - எம்பெருமான் மாநஸஞானத்துக்குப் பிரத்யட்சமாதலால்,
ஞானக்கண்ணுக்குப் புலனாதல்.  இச்செய்யுளினால், அடியவர்க்கெளியவனா
யிருத்தலாகிய பகவானது சௌலப்பியம் விளங்குதல் காண்க.  இனி,
முதலடியில் - (திரௌபதி) ஆயிரநாமங்களையும் உரைத்து அழைக்க என்று
பொருள் கொள்ளுதல், 'வேறோர் சொல்லுங்கூறாமற் கோவிந்தா கோவிந்தா
வென்றரற்றி' என்றதனோடு மாறுபடும்.  அன்றி, 'வேறோர் சொல்லுங் கூறாமல்'
என்றற்கு - எம்பெருமானது திருநாமங்களை யன்றி வேறொருசொல்லையுஞ்
சொல்லாமலென்ற பொதுப்படப்