பொருள்கொண்டால், அங்ஙனம் உரைக்கலாம். 'அமரர்' என்றது, பரமபதத்தில் வாழும் நித்யசூரிகளை. 'சீரடியோன்' என்றும் பாடமுண்டு. மான் - உவமவாகுபெயர். (401) 249.- திரௌபதிக்குஆடைசுரக்க, துச்சாதனன் கைசலித்தல். உடுத்ததுகி லுணர்விலானுரிந்திடவு மாளாம லொன்றுக் கொன்றாங்கு, அடுத்தநிறம் பற்பலபெற் றாயிரமா யிரங்கோடி யாடை யாகக், கொடுத்தருள வுரிந்தனபட் டிருந்தபெருந் தனிக் கூடங் கொள்ளா தோடி, எடுத்தனர்பற் பலவீர ருரிந்தோனுஞ் சலித்திருகை யிளைத்து நின்றான். |
(இ -ள்.) உணர்வு இலான் உரிந்திடவும் - அறிவுகேடனான துச்சாதனன் விடாமல் அவிழ்த்துக் கொண்டிருக்கவும், (களையக்களைய), உடுத்த துகில் - (அத்திரௌபதி) தரித்திருந்த ஆடையானது, மாளாமல் - முடிவுபெறாமல்,- ஒன்றுக்கு ஒன்று ஆங்கு அடுத்த நிறம் பல்பல பெற்று, ஒன்றற்கொன்று வெவ்வேறாகப் பொருந்திய பலபல நிறங்களைப் பெற்று, ஆயிரம் கோடி ஆடை ஆக - மிகப்பல ஆயிரக்கணக்கான நூதன வஸ்திரமாக (வளரும்படி), கொடுத்தருள - (எம்பெருமான்) அநுக்கிரகிக்க.- உரிந்தன பட்டு - (துச்சாதனனால்) அவிழ்க்கப்பட்ட பட்டாடைகள், இருந்த தனிபெருங் கூடம் கொள்ளாது - (அரசர்கள்) இருந்த ஒப்பற்ற பெரிய சபா மண்டபமும் இடங்கொள்ளாமையால், பற்பல வீரர் ஓடி எடுத்தனர்-மிகப்பலவீரர்கள் (அவ்வாடைகளை) விரைந்தெடுத்துக் கொண்டிருந்தார்கள்; உரிந்தோனும் - அவ்வாடையைக் களைகின்ற துச்சாதனனும், இரு கை சலித்து இளைத்து நின்றான் - தனது இருகைகளும் ஓய்ந்து இளைப்படைந்து நின்றிட்டான்; (எ -று.)
துச்சாதனன் ஓய்ந்தனனேயன்றி ஆடை சுரத்தல் ஓய்ந்திலது என்றவாறு. இவ்வாறு பலநிறமான ஆடைகள் மேன்மேற் சுரக்கின்ற இப்புதுமையைத் தெய்வாநுக்கிரகத்தால் நிகழ்ந்ததென வுணர்ந்து துகிலுரிதலை விட்டிராமல் தன்னாலான வரையிலும் மேன்மேலுங் களைந்தன னாதலின், துச்சாதனனை 'உணர்விலான்' என்றார். கோடியாடை - புதுவஸ்திரம். (402) 250.- வீடுமன் முதலியோர்திரௌபதியை நன்குமதித்தலும், வானவர் பூமழை பொழிதலும். கங்கைமகன் முதலான காவலர்மெய்யுறநடுங்கிக் கண்ணீர் சோரச், செங்கைமலர் குவிந்திவளே கற்பினுக்கு மரபினுக்குந் தெய்வ மென்றார், அங்கணகல் வானோரு மானகமும் வலம்புரியு மதிரத்தங்கள், பைங்கனக தருவின்மலர் மழைபொழிந்து கருணையினாற் பரிவு கூர்ந்தார். |
(இ -ள்.) கங்கைமகன் முதலான காவலர் - கங்கையின் குமாரனான வீடுமன் முதலிய அரசர்கள்,-மெய் உற நடுங்கி - |