எளிதோ-துரியோதனாதியர் செய்த இக்கொடுமையான நிந்தனைச்செயல் அற்பமானதோ? [அன்று; மிகப்பெரிதாகும்: ஆகையால், வீமன் முதலியோர் இவ்வாறு சபதஞ் செய்தது தகுதியே]', என்று - என்று சொல்லி, ஏங்கினார் - ஏக்கங்கொண்டு வருந்தினார்கள்; துரியோதனன் துஷ்டகாரியஞ்செய்தற்குப் பெருந்துணையாய் நின்றதனால், 'கர்ணனைப் போரிற்கொல்வேன்' என்று அருச்சுனனும், தமக்கு நேர்ந்த இவ்வளவு பெருந்தீங்குக்கும் பிரதானனாய் நிற்றலால் 'சகுனியைக்கொல்வேன்' என்று சகதேவனும், மற்றெல்லாரிடத்திலுங் காட்டில் மாயச்சூதாடி வென்ற இச்சகுனியினிடத்திலேயே மிக்க கறுவுள்ளதனால் அச்சகுனியைக் கொல்வதோடு நில்லாமல் அவன் வமிசத்தையே கருவறுக்குமாறு 'அவன் புதல்வனைக் கொல்வேன்' என்று நகுலனும் சபதமொழி கூறினரென்க. சகதேவன் சகுனியைக் கொல்லுமாறு சபதங்கூறியபின்னரே நகுலன் இவ்வாறு சபதஞ்செய்ததாக முதனூல் கூறும். 'துரியோதனாதியரது தீச்செயல்கள் மிகவுங்கொடியனவாகையால், மகாசாதுக்களும் மிக்க பொறுமையுள்ளவர் களுமான பாண்டவர்களும் மனம்பொறாது சபத மொழிகள் கூறவேண்டுவதாயிற்று; துரியோதனாதியர்கள் இவ்வளவு முறைகேடான பெருந்தீங்குகளைச் செய்து தமக்கே நாசத்தைத் தேடிக்கொண்டார்களே! அந்தோ!!' என்று அரசர்கள் இரங்கிக்கூறின ரென்க. பகலவன் - திநகரன் என்ற வடமொழியின் பொருளது. பார்த்தன் - பிருதையின் மகன்; தத்திதாந்தநாமம்: (பிருதை-குந்தி.) இது அருச்சுனனுக்குப் பெரும்பாலுஞ்சிறப்பாய் வழங்கும்; காரணவிடுகுறி. தாய்க்கு இளையமகனிடத்தில் அன்புமிகுதி என்ற பொதுநியாயம், இதற்குூக காரணமாகலாம். 'ஸௌபலன்' என்ற வடமொழி சுபலனது புதல்வனென்று பொருள்படுவதுபோல, சுபலனது பேரனென்று பொருள்படுவதற்கும் உரியதாதலாலும், சகுனியைக் கொல்வேனெனச் சகதேவன் சபதஞ்செய்ததாக வந்துள்ளதனாலும், சகுனியின் புதல்வனான உலூகனென்பவனைக்கொல்வே னென்று நகுலன் சபதஞ்செய்ததாக முதனூலிற் கூறியுள்ளதனாலும், இச்சொல்லுக்கு இவ்வாறு பொருளுரைக்கப்பட்டது. இனி, ஸௌபல நாயகனுயிர்க்கு - சௌபலனாகிய தலைவனது (சகுனியினது) உயிர்போன்ற புதல்வனுக்கு என்றும் உரைக்கலாம். மற்று - அசை. (411) 259.-திரௌபதி புலம்பியபோதுநிகழ்ந்த உற்பாதங்கள். மேகங்கள் வழங்காமல்விண்ணதிர்ந்திட் டூர்கோளும் வெயிலைச் சூழ்ந்து, பூகம்பம் பிறந்துடுவு மரும்பகலே விழுந்துடனேபொய்கை வாடி, யாகஞ்செய் நெடுஞ்சாலை யின்பாலுஞ்செந்நீராயிருந்த வேந்தர், ஆகங்க ளொளிமழுங்கிற் றவிதாவென்றணங்கனையா ளழுத போதே. |
(இ -ள்.) அணங்கு அனையாள் - தெய்வப்பெண் போன்றவளான திரௌபதியானவள், அவிதா என்று அழுதபோது - |