பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 393

ளாதலால், அவள், 'வேள்விக் கடன் சுமந்தமடமயில்' எனப்பட்டாள்.
திரௌபதிக்கு மாமனாராகிய திருதராஷ்டிரன் அவளை வணங்கியதாகக் கூறியது
பொருத்தமின்றா மாதலால் 'பொற்பதம் பணிந்தேத்தி' என்பதற்கு நல்வார்த்தை
சொல்லிச் சமாதானப்படுத்தி யென்று கருத்துக் கொள்ளுதலே சாலும்; இதுவே
முதனூலுக்கும் ஒத்ததாம்.  இனி, தெய்வத் தன்மையைக் காட்டினாளாதலாலும்,
யாகபத்தினியாயிருந்த மேன்மையை யுடையவளாதலாலும், தான் செய்வது
இன்னதெனத் தெரியாது திகைக்தனனாதலாலும், திருதராஷ்டிரன் திரௌபதியைப்
பணிந்தேத்தின னென்றே கொள்ளுதலு மொன்று.  உத்பாதம், பாதம், அபராதம்
- வடசொற்கள்.                                          (413)

261.- இதுவும் அது.

உத்தமமாங் குலமயிலே யென்சிறுவரறியாம லுனக்கு நேரே,
மைத்துனரா முறையாலிவ் வழக்கலா தனசெய்தார் மதியி லாமல்,
எத்தனைதாழ் விவர்புரிந்தா ரென்றாலு மவையொன்று மெண்ணா
                                           தின்னே,
பித்தர்மொழி யெனக்கருதி மறந்தருளென் றொருகோடிபிதற்றி
                                            னானே.

     (இ -ள்.) (பின்னும் திருதராட்டிரன் திரௌபதியை நோக்கி), 'உத்தமம்
ஆம்குலம் மயிலே-சிறந்ததாகிய குலத்திற்பிறந்தவளான மயில் போன்றவளே!
என்சிறுவர்-எனது புதல்வரான துரியோதனாதியர், மைத்துனர் ஆம் முறையால்
-மைத்துன ரென்கிற உறவு முறையைக் கொண்டு, அறியாமல் - (தாம்
செய்வனஇன்னவை யென்று) தெரியாமல், இ வழக்கு அலாதன-முறைகேடான
இத்தீச்செயல்களை, உனக்கு நேரே செய்தார்-; மதி இலாமல் இவர் எத்தனை
தாழ்வுபுரிந்தார் என்றாலும்-அறிவில்லாமையால் இத்துரியோதனாதியர்
எவ்வளவு[மிகுதியாக] அபராதங்களைச் செய்தாரானாலும், அவை ஒன்றும்
எண்ணாது-அவற்றில் ஒன்றையும் மனத்திற் கொள்ளாமல், பித்தர்மொழி என
கருதி -பைத்தியம் பிடித்தவர் கூறிய சொல்லாகும் என்று நினைத்து; இன்னே
மறந்தருள்-இப்பொழுதே (நீ) மறந்து விடுவாயாக, என்று-என இவ்வாறு,
ஒருகோடி பிதற்றினான்-மிகப்பலவாக வாய்வந்தபடியெல்லாங் கூறினான்;
(எ -று.)

    மைத்துனர் - கணவருடன் பிறந்தவரும், மனைவியுடன் பிறந்தவரும்,
அத்தைமக்களுமாவர்.  இங்கே கணவனுடன் பிறந்தவர்.  மைத்துன
முறைமையாற்பரிகசிக்கப்படுபவர் ஆடவர்களே யாதல் உலக வழக்கா
யிருக்கவும், அதற்குமாறாகப் பெண்ணைப் பரிகசித்த துரியோதனாதியரது
குற்றத்தைத்தணிக்கவேண்டுகிற திருதராஷ்டிரன் திரௌபதியின்மனம்
இரங்குமாறுமைத்துன முறையாற் பரிகாசஞ்செய்ததாகப் போலிச்சமாதானங்
கூறினானெனஅறிக.  ஒருகோடி-மிகப்பலவெண்ணிற்கு ஒன்று காட்டியவாறு.
திருதராஷ்டிரன் இதுவரையிலும் நன்மொழியொன்றும் கூறாதிருந்து விட்டு
இப்போது கூறுவனவெல்லாம் பொருந்தாத பயனில்லாத வெற்றுமொழி
யாகுதலால், 'பிதற்றினான்' என்றார்.                         (414)