பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 395

 'வரையும்' என்ற பெயரெச்சம் - புயத்தைத் தொடராது, புயத்தை யுடையவர்க்கு
அடைமொழியாகும்; இவ்வாறு பொருள் கூறினால், இச் செய்யுள் திரிபு
என்னுஞ் சொல்லணி கொண்டதாம்.                              (415)

263.- திருதராட்டிரன் பாண்டவர்க்கு முகமன் கூறுதல்.

கோமன்றி லருந்ததியைக்கொண்டினிநீர் நில்லாமற் குறுகவூரே,
போமென்று வரவழைத்துத் தழீஇக்கொண் டென்கண் மலரே
                                   போல்வா னெம்பி,
யாமென்று மவனென்று மிரண்டில்லைவிளையாட்டென் றிருந்தே
                                           மிவ்வாறு,
ஆமென்ப தெனககொருவருரைத்திலரால் யாமுமுத லறிந்தி
                                             லேமே.

     (இ -ள்) 'நீர் - நீங்கள். கோ மன்றில் - இராசசபையிலிருக்கின்ற,
அருந்ததியை - (கற்பினால்) அருந்ததியை யொத்தவளான திரௌபதியை,
கொண்டு - உடன் அழைத்துக் கொண்டு, நில்லாமல் - இங்கேயிராமல்,  இனி
- இப்பொழுதே, ஊரே குறுக போம் - (உமது) ஊரை அடையுமாறு விரைந்து
செல்லுங்கள்', என்று - என்று (பாண்டவர்களைத் தனது அருகில்) வருமாறு
கூப்பிட்டு, தழீஇக்கொண்டு - கட்டியணைத்துக் கொண்டு, (பின்னும்
கூறுவான்:)- 'எம்பி - எனது தம்பியாகிய பாண்டு, என் கண்மலரே போல்வான்
- எனக்குக் கண்ணையே யொத்திருந்தான்; யாம் என்றும் அவன் என்றும்
இரண்டு இல்லை - யான் வேறு என்றும் (தம்பியாகிய) அப்பாண்டுவேறு
என்றும் (யான்) நினைத்ததில்லை; (நான் உங்களையும் அவ்வாறே எனது
புத்திரர் போலவே கருதியிருக்கின்றேன்; ஆயினும் நீங்கள் சூதாடும்போது,)
விளையாட்டு என்று இருந்தேம் - விளையாட்டாக ஆடுகின்றீர்களென்றே
எண்ணியிருந்தேன்; இ ஆறு ஆம் என்பது எனக்கு ஒருவர் உரைத்திலர் -
இவ்வாறு பெருந்தீங்கு நேரிடுமென்பதைப்பற்றி ஒருவரும் எனக்கு
அறிவித்தாரில்லை; யாமும் முதல் அறிந்திலேம் - நானும் முன்னம் தெரிந்து
கொண்டிலேன்; (எ - று.)- அறிந்தால் தடுத்திருப்பேனென்பது குறிப்பெச்சம்.

    பாண்டுவும் நானும் சிறிதும் வேற்றுமை யில்லாதிருந்தோம்; அவ்வாறே
நும்மிடத்தும் எனது மைந்தரிடத்திற்கொள்ளும் பேரன்பைக் கொண்டி
ருக்கின்றேன்; ஆகையால், உமக்குத் துன்பத்தை யுண்டாக்க வேண்டுமென்பது,
எனக்கு விருப்பமன்று.  உனது மைந்தரும் நீவிரும் விநோதமாகச்
சூதாடுகின்றீரென்று கருதியதனால், நீங்கள் சூதாடுவதை நான் விலக்கவில்லை.
இவ்வாறு பெரும் பொல்லாங்குக்குக் காரணமாம்படி சூதாடுகின்றீரென்பது
எனக்குத் தெரிந்திருந்தால், நான் உங்களை ஆடவொட்டாது முன்னமே
தடுத்திருப்பேன்; போனது போகட்டும்.  நுமது மனைவியை
அழைத்துக்கொண்டு இப்பொழுதே நும்மூர்க்குச் செல்லுங்கள் எனத்
திருதராட்டிரன் பாண்டவரைத் தேற்றி விடைகொடுப்பானாயினனென்க.
இப்பொழுது நீவிர் இங்கு இருப்பீராயின் துரியோதனாதியர் உமது பொருளை
மீண்டுங் கவர முயலுவரென்று குறிப்பிப்பான், 'இனி நில்லாமற் குறுக வூரே