பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 396

 போம்' என்றான்.  திருதராஷ்டிரன் தனது கண்களைப்பற்றியே கூறுவதனாலும்,
அவனது கண் குருட்டுக்கண்ணாதலாலும், 'கண் மலர்' என்பது உவமை
கருதியதன்று;  உலகவியற்கைபற்றிக் கூறிய தென்க.  அருந்ததி -
உவமையாகுபெயர்.  ஊரே, ஏகாரம் - பிரிநிலை.  இலரால், ஆல் - ஈற்றசை.
அறிந்திலேம் - தன்மைப் பன்மை எதிர்மறையிறந்தகாலவினைமுற்று:  ஏகாரம்
- இரக்கம்.  'யாம்' என்ற எழுவாயிரண்டும் தனித்தன்மைப்பன்மை.   (416)

264.-இதுவும் அது.

என்மைந்த ரிவர்நீங்களவன்மைந்த ரெனநினையே னிவரே யெம்பி,
தன்மைந்த ருங்களையே யென்மைந்த ரென வளர்த்தேன் சம்பு
                                              நாட்டு,
மன்மைந்த ருங்களைப்போல் வேறுபடா தித்தனைநாள்வளர்ந்தா
                                            ருண்டோ,
வின்மைந்தர் நடக்கவென விடைகொடுத்தான்விரகினுக்கோர் வீடு
                                           போல்வான்.

    (இ - ள்.) 'இவர் என் மைந்தர் - இத் துரியோதனாதியர் எனது
புதல்வர்கள்:நீங்கள் அவன் மைந்தர் - (பாண்டவராகிய) நீங்கள்
அப்பாண்டுவினதுபுதல்வர்கள்,' என-என்று, நினையேன் - (வேறுபாடுதோன்ற
நான்)நினையாமல், இவரே எம்பிதன் மைந்தர் (என)-துரியோதனாதியரையே
எனதுதம்பியின் புதல்வர் (என்று எண்ணியும்), உங்களையே என் மைந்தர்
என-உங்களையே என் மைந்தர் என்று எண்ணியும், வளர்த்தேன் - (நான்
இதுவரையில் உங்களை) வளர்த்து வந்தேன்;  சம்பு நாடு மன் மைந்தர் -
இந்த ஜம்புத்வீபத்தில் தோன்றிய அரசகுமாரர்களில், உங்களை போல் -
உங்களைப்போல, இத்தனை நாள் வேறுபடாது வளர்ந்தார் - இவ்வளவு
காலம் மனம் மாறுபடாமல் வளர்ந்தவர்கள், உண்டோ - எவரேனும்
இருக்கின்றார்களோ? வில் மைந்தர் - வில்லில் வல்ல (எனது) புதல்வராகிய
நீங்கள், நடக்க - (நுமது இந்திரப்பிரத்த நகரத்துக்குச்) செல்வீர்களாக,' என
- என்று சொல்லி, விடை கொடுத்தான் - (பாண்டவர்கட்கு)
விடைகொடுத்தனுப்பினான்: (யாவனெனில்), - விரகினுக்கு ஓர் வீடு போல்வான்
- தந்திரங்கட்கெல்லாம் இருப்பிடம் போன்றவனான திருதராஷ்டிரமகாராஜன்;
(எ - று.)

    கீழ்ச்செய்யுளில் தான் தனது தம்பியினிடத்தில் ஒற்றுமையா யிருந்ததைக்
கூறியதிருதராஷ்டிரன், இச் செய்யுளின் முதலிரண்டடிகளால், தன் தம்பி
மைந்தரானபாண்டவரிடத்துத் தன் மைந்தரிடத்தினும் தான் மிக்க அன்பு
கொண்டிருப்பதையெடுத்துக் கூறுகின்றான்.  பாண்டவர் மிகவும் பரிபவப்
பட்டமையாற் சினங்கொண்டு ஒருகால் தன் மைந்தரை அடக்கக்கூடுமென்று
அஞ்சிய திருதராட்டிரன், அப்பாண்டவர் சினந்தணிந்து மகிழ்ந்து
அடங்கியிருக்குமாறு, 'சம்பு நாட்டு மன்மைந்த ருங்களைப்போல் வேறுபடா
தித்தனைநாள் வளர்ந்தாருண்டோ?' எனப் புனைந்து கூறுகின்றான்;
இனிமேலும் நீங்கள் முன்போலவே வேறுபடாதிருக்க வேண்டுமென்பது
குறிப்பு. ஜம்பூ - நாவல்:  அதனை