பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 401

கொடுஞ்செயலில் மிக்கவல்லமையுள்ளவனென்பார் அவனை 'வீரன்' என்று
வஞ்சப்புகழ்ச்சியாற் கூறியும் அவனது கொடுமையை விளக்கினார்.  வெகுளி
தோன்ற -(தருமபுத்திரனுக்குக்) கோபமுண்டாகுமாறு என்றுமாம்.
திருதராட்டிரனது அநுமதிப்படியே தருமபுத்திரன் மீண்டும் பெற்ற
இராச்சியத்தைக்குறித்து 'சூதாடித்தோற்றதை நீங்கள் எவ்வாறு பெறலாம்?' என
இவ்வாறாகத் துச்சாதனன்.  கூறுகின்றா னாதலின், 'வழக்குறச் சொன்னான்'
என்றது.  வழக்காவது-ஒரு பொருளை எனதெனதென்றிருப்பார் அப்பொருள்
விஷயமாகக் கூறுவது.                                        (421)

269.- இதுவும், அடுத்த கவியும்- ஒருதொடர்:
துச்சாதனன் வார்த்தை.

சரதமென் றுண்மை யாகச் சபையினீயிசைந்து தோற்ற
இரதமுங் களிறு மாவும் யாவையுமீண்டுந் தாரோம்
சுரதமென் கொடியு நீருந்தொண்டொழிந் துரியீ ராமின்
விரதமுன் னறத்துக் கென்றும்பொய்கொலோ மெய்யே யன்றோ.

     (இ -ள்.) (துச்சாதனன் தருமபுத்திரனை நோக்கி),-உன் அறத்துக்கு
விரதம் என்றும் பொய்கொல் ஓ - நீ மேற்கொண்டுள்ள தருமத்துக்கு ஏற்ற
விரதமாயிருப்பது பொய்தானா? மெய்யே அன்றோ-உண்மையே யல்லவா?
சரதம் என்று-(நான் தோற்றது) நிச்சயமென்று சொல்லி, நீ-, இசைந்து-
மனமொப்பி, சபையில் உண்மைஆக தோற்ற -(பலபேர் கூடிய) சபையில்
முறைப்படியே (சூதாடித்) தோற்ற, இரதமும்-தேர்களையும், களிறும்-
யானைகளையும், மாவும்-குதிரைகளையும், யாவையும் - மற்றும்
எல்லாவற்றையும், மீண்டும்-மறுபடியும், தாரோம்-கொடுக்கமாட்டோம்;
(வேண்டுமானால்), சுரதம் மெல் கொடியும்-போகத்திற்கு உரிய மெல்லிய கொடி
போன்றவளான திரௌபதியும், நீரும்-நீங்கள் ஐவீரும், தொண்டு ஒழிந்து-
அடிமைத்தன்மையினின்றும் நீங்கி, உரியீர் ஆமின்-சுதந்திரமுடையவராகுங்கள்;
(எ - று.)

     நீ பொய் பேசுவதையே விரதமெனக் கொண்டிருந்தால் தோற்றிழந்த
இராச்சியத்தைப் பறித்துக்கொண்டுவிடலாம்:  எப்பொழுதும் சத்தியவிரதனா
யிருப்பதனால், பலருங்கூடிய சபையில் முறைப்படி சூதாடித் தோற்ற
இராச்சியத்தைக் கைப்பற்றுதற்கு வகையில்லையே! அன்றியும் இராச்சியத்தைச்
சூதாடிச் சயித்தவர் நாங்களே யாதலால், இந்த இராச்சியத்தை நாங்கள்
உடன்பட்டுக் கொடுத்தால் மாத்திரம் உங்களுடையதாகுமேயன்றி எமது தந்தை
கொடுக்க நீங்கள் பெற்றுக் கொள்ளுதற்கு நுமக்கு உரிமையில்லை;
இராச்சியத்தைப் பெறுவதிலுள்ள பேராசையாற் பெற்றுக்கொள்வோ மென்றாலும்,
நாங்கள் கொடுக்கமாட்டோம்;  இப்பொழுது வேண்டுமானால், எமது
தந்தைக்காக, உங்களை அடிமைத்தன்மையினின்று மாத்திரம் நீக்கி
உரிமைபெற்றவர்களாகச் செய்கிறோமென்று துச்சாதனன் கூறியதாக விரித்துப்
பொருள் காண்க.  தருமபுத்திரனுக்கு 'சத்தியவிரதன்' என்று ஒரு பெயரிருத்தல்,
இங்கு அறியத்தக்கது.  போகமாதென்று பழிப்பான், 'சுரதமென்