கொடி' என்றான். தருமபுத்திரனொருவனே தோற்று இழந்தவனாதலால் 'நீ' என்று ஒருமையாகவும், உரிமையைப்பெறுதல் ஐவருமாதலால் 'நீர்' என்று பன்மையாகவும் கூறினான். (422) | 270. | தந்தைத னருளாற் பெற்றீருரிமையுந் தம்பி மாரும் பைந்தொடி தானு நீயும்பதிபெயர்ந் துயர்ந்த வேயின் வெந்தழ லனைய கானின்வெளிப்படா துறைமி னின்றே யிந்தமா தரணி கைவிட் டேகுமினெழுமி னென்றான். |
(இ -ள்.) உரிமைஉம் - (அடிமைத்தன்மையினின்று நீங்கிச்) சுதந்திரமாயிருத்தலையும், தந்தை தன் அருளால் பெற்றீர் -(எமது) பிதா (நும்மிடத்துக்) கொண்டதயையினால் (நீங்கள்) அடைந்தீர்கள்; (ஆகையால்), தம்பிமாரும் -(உனது) தம்பியாகிய (வீமன் முதலிய) நால்வரும், பைந்தொடி தானும்-பசும்பொன்னாற்செய்த வளையலை யணிந்தவளான திரௌபதியும், நீயும்-, பதி பெயர்ந்து - இவ்வூரை விட்டுச்சென்று, உயர்ந்த வேயின் வெம் தழல் அனையகானின்-ஓங்கி வளர்ந்த மூங்கிலையுடையதும் கொடிய தீப்போலும் வெம்மை மிக்குள்ளதுமாகிய காட்டிலே, வெளிப்படாது உறை மின் - மறைந்து வசியுங்கள். இந்த மாதரணி கைவிட்டு - இந்தப் பெரிய பூமியை அரசாளுதலைவிட்டு, இன்றே எழுமின்-இப்பொழுதே புறப்பட்டு, ஏகுமின்- வெளிச்செல்லுங்கள்,என்றான்-என்று (பாண்டவர்களை நோக்கித் துச்சாதனன்) கூறினான்; (எ - று.) 'நீங்கள் அடிமையாயிருந்தால் இங்கேயேயிருந்து எமக்குப் பணிவிடை செய்யவேண்டும்: எமது தந்தையின் அருளால் அவ்வடிமைத்தன்மையினின்று நீங்கிவிட்டபடியால், இனி நீங்கள் எங்களிராச்சியத்தில் நில்லாது காட்டிற்குப்போய் வசியுங்கள். இந்த எமது இராச்சியத்தில் நீங்கள் இருப்பதுங்கூடாது' என்று துச்சாதனன் தமது ஆலோசனைப்படியே கூறினனென்க. 'பாண்டவர்கள் காட்டிற் பெருந்துன்பத்திற்கு இலக்காகவேண்டும்' என்று தாம் கொண்ட கொடிய விருப்பத்திலுள்ள ஊற்றமிகுதியால், துச்சாதனன் 'எழுமின் ஏகுமின்' என்பதற்குமுன் 'கானின் உறைமின்' என்றான். எழுமின் ஏகுமின் - எழுந்து ஏகுமின்; முற்று - எச்ச மாயிற்று. "வினைமுற்றே வினையெச்சமாகலும்" என்பது விதி. பைந்தொடி - பண்புத்தொகையன்மொழி. 'உரிமையும்' என்ற உம்மை-இழிவுசிறப்பு. (423) 271.-அச்சொல்லைக் கேட்டுத்திருதராட்டிரன் ஆலோசித்தல். என்றலுந் தந்தை மைந்தனியம்பிய வாய்மை கேட்டு நின்றவா நில்லா வஞ்சநெஞ்சின னாகி மீண்டும் வென்றிகொ ளரச னோடும்வெஞ்சிலை விதுர னோடும் ஒன்றிய வமைச்ச ரோடு முறுவனவுசாவ லுற்றான். |
(இ -ள்.) என்றலும்-என்று (துச்சாதனன்) கூறியவுடனே, தந்தை- (அவனது) தகப்பனாகிய திருதராஷ்டிரன், மைந்தன் |