பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 403

இயம்பிய வாய்மை கேட்டு-தனது குமாரனாகிய அத்துச்சாதனன் கூறிய
வார்த்தையைக்கேட்டு, நின்ற ஆ (று) நில்லா வஞ்சம் நெஞ்சினன் ஆகி-
நின்றபடியாக (ஒருநிலையில்) நிற்காமல் மாறுபடுகின்ற வஞ்சனையுள்ள
மனத்தையுடையவனாய், மீண்டும்-மறுபடியும், வென்றி கொள் அரசனோடும்-
வெற்றிபொருந்திய அரச குலத்தவனான வீடுமனுடனும், வெம் சிலை
விதுரனோடும்-கொடிய வில்வித்தையிற் சிறந்தவனான விதுரனுடனும், ஒன்றிய
அமைச்சரோடும்-(மற்றும் அங்குப்) பொருந்திய மந்திரிமார்களோடும், உறுவன
- அப்போது செய்யத்தகுவனவற்றை, உசாவல் உற்றான் - விசாரிப்பவனானான்;
(எ - று.)

    சகுனியின் துராலோசனையால் துரியோதன னேவிய மொழிப்படியே
துச்சாதனன் தருமனை வெருட்டிக்கூறியதைக் கேட்டபொழுது, திருதராட்டிரன்
பாண்டவர்கட்கு இராச்சியத்தை மீட்டுங் கொடுத்தலில் விருப்பமில்லாதவனாகி,
அப்பொழுதைக்கு ஏற்ப ஆலோசனை கூறுமாறு வீடுமன் முதலியோரை
வினாவினனென்க.  முதலில் துரியோதனாதியரது துராலோசனைக்கு உட்பட்டுப்
புதுமண்டபங் காணவேண்டுமென்ற ஒருவியாஜத்தாற் பாண்டவரை வரவழைத்து
அவர்கள் சூதாடித் தோற்கத் திரௌபதியைத் தம் புதல்வர் பரிபவிக்கும்
வரையிலும் சம்மதித்திருந்தும், பின்பு வெருவி மனம் மாறுபட்டுப் பாண்டவர்
திறத்தில் அன்பு கொண்டு அவர்கட்கு  உரிமையையும் அளித்ததோடு
அரசாட்சியையுங் கொடுத்தும், பிறகு துச்சாதனன் வார்த்தையைக் கேட்டு
மீண்டும் மனநிலைமாறி வஞ்சகத்தன்மைமேலிட்டுப் பாண்டவரிடத்தினின்று
தான்கொடுத்த இராச்சியத்தை எவ்வாறு மீட்டும் வாங்கிவிடலாமென்று
இப்போது ஆலோசித்தும் நிற்கின்றனனாதலால், திருதராஷ்டிரனை
'நின்றவாநில்லா  வஞ்சநெஞ்சினன்' என்றார்.  'நின்றவாநில்லாநெஞ்சு' -
அஸ்திரசித்தம்;  "நின்றவாநில்லாநெஞ்சினை", என்ற தொடர்
பெரியதிருமொழியிலும் வந்துள்ளது.  'வென்றி கொளரசன்' என்பது-
துரியோதனனைக் குறிப்பாகக் கொள்ளுதல் சிறப்பன்று.               (424)

272.-துரோணனது மறுமொழி.

மேல்வரு கரும மெண்ணாவெகுளியான் மிக்க வீரர்
நால்வரு மெம்ம னோர்கணவின்றன சிறிதுங் கேளார்
சேல்வரும் பழன நாட செயலறிந்தெண்ணி வேத
நூல்வரு முறைசொல்றொனோன்சிலை நூலின் மிக்கோன்.

     (இ -ள்.) நோன் சிலை நூலில் மிக்கோன் - வலிய வில்லின் வித்தையிற்
சிறந்தவனாகிய துரோணன்,- (திருதராஷ்டிரனை நோக்கி), 'சேல்வரும் பழனம்
நாட - கயல்மீன்கள் மிகுதியாகச்சஞ்சரிக்கப்பெற்ற [நீர்வளத்தையுடைய]
கழனிகளைக் கொண்ட குரு நாட்டிற்கு உரிய தலைவனே! மேல் வரு கருமம்
எண்ணா - இனிமேல் வரக்கூடிய காரியத்தை ஆராய்ந்தறிதலில்லாத,
வெகுளியால் மிக்க-மிக்ககோபத்தையுடைய, வீரர் நால்வரும்-(சகுனி கர்ணன்