ச பா ப ரு வ த் தி ன்
அபிதான சூசிகை யகராதி
அசுவத்தாமன்:- துரோணன்
மைந்தன், சூது-139.
அருச்சுனன்:-இந்திரன் மகன்-
இராய,19,38; சூது-88; மயனிடம்
தேவதத்தம் என்னுஞ் சங்கு
பெற்றான், இராய-7; தோளில்
விற்குறியுடையன் 18; வடக்குத்
திக்குவிசயத்திற்குப் புறப்பட்டவன்,
39; யாகத்தில் நறுமணப்பொருள்கள்
மலர்கள் வந்தோர்க்கு
அளித்தனன்,
100; திரௌபதியின் சுயம்வரத்தில்
மெய்ப்படு முனியாய் வந்து
வில்லிறுத்தான், சூது-23.
இந்திரன்:- நூறுமாமகத்தோன்,
இராய-21; கண்ணாயிரத்தோன்,32;
கடவுளரசு-38.
உலூகன்:-புரோகிதன்; வியாசரையும்
ஏனைய இருபிறப்பாளரையும்
இராயசூயத்திற்கு அழைத்துவரத்
தருமனால் அனுப்பப்பட்டவன்,
இராய-68.
உலூகன்:- சகுனியின் மகன்;
நகுலனால் கொல்லப்படுபவன்;
சூது-258.
கஞ்சன்:-கம்சன்; சுராசுரர்
வியக்குமவன், இவனைக்
கொன்றவன் கண்ணன், இராய-116.
கடோற்கசன்:- [வீமனுக்கு
இடும்பியென்னும் அரக்கியினிடம்
பிறந்தமகன்]. கன்னிலங்கொலென
வலிய மெய்யுடையன்,
விபீடணனது இலங்காபுரியில்
சமருழக்கினான், இராய-61.
கண்ணபிரான்:-
எல்லாவுயிர்களையும் காக்குமாறே
பூண்டருளும் பெருமான், இராய-1;
தண்துழாய்முடியோன், 9;
உபேந்திரனாவன், 14; தோளில்
விற்குறியுடையன், 18;
சந்திரகுலத்தில் யதுவமிசத்தில்
பிறந்தவன், 19; வடமதுரைவிட்டுத்
துவாரகைப்பதி புகுந்தவன், 21;
பாண்டவர்க்கு
ஆருயிர்த்துணையாய் வந்த
மாமரகதவடிவோன், 28;
குன்றால்மழைதடுத்த கோபாலன்,
30; மீனங்கமடமேன
நரவரியாய்நரராய் மெய்ஞ்ஞான
ஆனந்தமுமாகிய நாதன், 41;
சிசுபாலனைத் தொலைத்தற்குப்
பிறந்துள்ளவன், 67;
நீலமேனியிரவியையனையான்,
70; நேமியான், 72; ஆடம்பரக்
கொண்டலன்னான், 78; கங்கை
தருபொற்கழலான், 79; காயா மலர்
வண்ணன், பூச்செண்டு
தரித்தோன்,
80; சகடாசுரன் கஞ்சன்
இவர்கள்பட வுதைத்த காலான், 81;
பிறப் பிறப்பறுக்க வல்லோன், 85;
மயர் வறுஞான வடிவமாய் நின்ற
மாயன், 110;
அக்ரபூசனைக்குரியவன், 112; சூரன்
மாமகன் [வசுதேவன்]
வயிற்றுதித்தான், கஞ்சனைமலைந்
தான், 116: பிறந்தபொழுதே பெற்ற
தாய்தந்தையரால் வணங்கப்பெற்ற
வன், கற்ற மாயையாற் காளிந்திநதி
நீந்தி நந்தகோபன் மகனாயினான்,
117; பூதனைமுலைப் பாலோடு
யிருண்டான், தயிர் நெய் பால்
அருந்தவே தாய்
வடத்தினிற்பிணிப்ப
உரலுடனிருந்தழுதான், 118;
கோபஸ்திரீகள் வீடுதோறும்