பக்கம் எண் :

416அபிதான சூசிகையகராதி

  வெண்ணெய்க்குஆடினான்,  
  அவர்கண்முகந்தொறும்
  எச்சிலாக்கினான், கன்றை விளவின்மேலெறிந்து
 கொன்றான், அரவின் முதுகையும்
  புள்ளின்தாலுவோடு அலகையும்
  பிளந்தான்,119; கோபிகைகளின்
  ஆடைகளைக்கவர்ந்து இன்பச்
 செருக்கிலே மயக்கிக் காமனுமா
 னான்,120; இந்திரனுக்காக ஆக்கின
  அடிசிலையுண்டான்,
  கோவர்த்தனமேகுடையாக மிக்க
  வேகத்துடன்கன்மாரியைத்
  தடுத்தான்,ஏறுபடுத்தான், 121;
  பிரமன்தன் மாயையினால்
  கன்றுகளையும்
  கோபாலச்சிறார்களையும்
  மறைத்திட்டபோதுஓராண்டுக்
  காலம் வம்பின்புரிந்தமாயையன்,
  122;பகைவர்க்கஞ்சி
  வடமதுரைவிட்டுத் தமையனுடன்
  துவாரகைபுகுந்தான், 123;
  வஞ்சனையினால்பலஅமர்மலைந்
  தவன்,124; யதுகுலத்தரசர்களில்,
  தானொருவனேமிஞ்சி விரகால்
  மேதினிபுரந்தான், 124;
  பெற்றோர்க்கும்தமையன்
 மார்க்கும் பெருந்தீங்கு
  விளைவித்தகொடியன் என்று
  நிந்திக்கப்பட்டான்,125; பரிதி
 போல்வான், 127;
  ஆவிகளனைத்தினும்
  நிறைந்தொளிசிறந்த அச்சுதன்,
  அமுதம்அமரருக்கு அளித்தோள்,
  138, நெடியோன்,139;
  சுருதிக்கெட்டொணாதொளிருஞ்
  சுடர்மணித்துய்யசோதி, 149;
  சல்லியன்மேல்படையெடுத்தான்,
  சூது-17;
  வெண்ணெய்வாய்க்கள்வன்,18;
  கரியபேய்முலைப்பாலுண்டநெஞ்
  சினன்,19; அருமறை சொல்லிய
  நாமமாயிரமும்உரை தழைக்க
  அமரர்போற்றும்
  திருமலர்ச்செஞ்சீறடி
  யோன்,கரியமுகிலனையான், 248.
கர்ணன்:-சூரியன்மகன்; யாகத்தில்
 வருவோர்க்குத் தானமும்
  தியாகமும்கொடுக்க அவன்
  வசத்தில்தருமனால்
  ஒப்பிக்கப்பட்டன,இராய -102;
  தான் தானம்வண்மை நாளும்
  அளித்துப்புறஞ்சுவர் 
  கோலஞ்செய்வான்,சூது-5;
  விதரணவிநோதன்,7; இவனது வில்
  'காலப்ருஷ்டம்'என்று
  பெயர்பெறும்;சூது-9 உரை; அங்கர்
  கோமான்,20, 153; மாறா
  வண்மையன்,194.
காந்தாரி:- [திருதராட்டிரன்மனைவி];
  அருந்ததிக்குநேர் அன்னை, சூது-
  134;கணவன் குருடாதலின் தானும்
  ஆடையால்தன் கண்களை
  மறைத்துக்கட்டிக்கொண்டு
  கண்பார்வையிலளாயினள், 213;
  பலபாதகரைப்பயந்தாள், 218;
  கொடியவள்,222.
கிருபன்:-[துரோணன்மனைவியான
  கிருபிக்குஉடன் பிறந்தவன்:
  பாண்டவர்துரியோதனாதியர்க்கு
  முதல்வில்லாசிரியன்]கீதநான்மறை
  வல்லவன்சூது-139.
குபேரன்:- அளகையின்தலைவன்,
  இராய-12.
சகதேவன்:- சராசந்தன்மகன்;
  இவனைமூவரும் முடிசூட்டினர்,
  இராய-37.
சகாதேவன்:- பாண்டவரில்கடைசி
  யாவன்; தெற்குத்திக்கு
  விசயத்திற்குப்புறப்பட்டவன்,
  இராய-39;நீலனது மாகிஷ்மதி
  நகரத்துக்காவலாயிருந்த
  அக்னிதேவன்அடங்கும்படி
  அர்த்தசந்திரபாணங்களை
  ஏவினான்,56;
  பெருஞானபண்டிதன்,65;