பக்கம் எண் :

அபிதான சூசிகையகராதி 419

  சின் வடிவுஅன்னான், 240;
  இருள்மனத்தோன்,253; தொடை
  காட்டியபுன்றொழிலோன் 254.
துருவாசமுனிவன்:-துய்ய
  செய்தவத்தன்,வேதபண்டிதன்,
  இவனை ஸ்ரீவைகுண்டத்தின்
  கோயில்துவாரபாலகராகிய
  ஜயவிஜயர்உட்புகவொட்டாது
  விலக்கினர்,இராய-142; மிக்க
 முன்கோபியாதலின்,
  துவாரபாலகரைப்பூமியில் பிறக்கச்
  சபித்தான்,143; பின் சாப நிவிருத்தி 
  கூறினன்,144.
துரோணர்:- வெஞ்சிலைக்குரு,சூது-
  139; நோன்சிலைநூலின்மிக்கோன்,
  272; அந்தணன்,275, 278.
நகுலன்:- மேற்குத்திக்கு
  விசயத்திற்குப்புறப்பட்டவன்,
  இராய-39;யாகத்தில் வந்தோர்க்கு
  வெற்றிலைபளிதம்முதலிய
  அளித்தனன்,100; அசுவசாத்திரம்
  வல்லவன்,100; சகுனியின்
  மகனாகியஉலூகனைக்கொல்வேன்
  எனல்,258.
 
நாரதன்:- பிரமன்போன்ற
  சிறப்புடையன்,இராய-10;
  பிரமனதுமனத்தினின்று
  தோன்றியவன்,இராய-10; உரை;
  திவ்வியவீணாகானத்தினால்
  தேவர்களைமகிழ்விப்பவன்,
  சிவபிரான்திருக்கூத்துக்கிசைய
  மகிழ்ந்துஇசை பாடுந் தத்வஞானி,
  11; மனத்தின்அழுக்கணுகாத
  மாதவத்தோன்,12; பண்மிசை
  வீணையின்கிழவன், 13;
  யாகத்திற்குக்கண்ணனை
  யழைத்துவரஇவரைத் தருமன்
  அனுப்பினான்,68:
  அவபிருதஸ்நானம்ஆனபின்
  புதருமனைவாழி பாடினன், 109. 
நீலன்:-அக்னிதேவனைக்
  காவலாகவுடைய
  மாஹிக்ஷ்மதிநகரத்தரசன்,இராய-
  55, 56.
பலராமன்:-
  வெள்ளைத்திருநிறத்தவன்,இராய-
  71; காதொருகுழையோன்,140.
பாண்டு:- பாண்டவரின்தந்தை,
  இராய-13.
பிந்துஸரஸ்:- கைலாசகிரியின்
  வடக்கில்மைநாகபர்வதத்தைச்
  சார்ந்தஇரணியசிருங்கமென்னுங்
 குன்றிலுள்ளது; பலவகை
  இரத்தினங்கள்ஆனாமல்
  கிடக்கப்பெற்றது,இராய-4.
பிராதிகாமி:-துரியோதனனது
  தேர்ச்சாரதி,சூது-154;
  திரௌபதியை
  மன்னவைக்குக்கொணரக்
  கட்டளையிடப்பட்டனன், 209; 
  அவன்கற்பித்துக்கூறிய வார்த்தை,
  211
பிருகத்ரதன்:-சராசந்தன்தகப்பன்,
  இராய-31;மகதகுலவேந்தன், 35.
பூரு:-யயாதியின்குமாரன்,
  யதுவினுடன்பிறந்தவன்; இவன்
  குருகுலத்துப்பூர்விகராசர்களிற்
  பிரதானன்,இராய-88.
மயன்:-அசுரத்தச்சன்;
  பாண்டவர்க்காகஅரிய
  மணிமண்டபமொன்று
  சுதன்மையினும்முதன்மைபெற
  ஈரேழ் திங்களில்அமைத்தனன்,
  இராய-3-7;வீமனுக்குக் கதாயுதமும்
 அருச்சுனனுக்குச் சங்கும் ஈந்தனன்,
  இராய-7.
யாகசேனன்:-பாஞ்சால
  தேசத்தரசனாகியதுருபதன்;
  இவன் இராயசூயத்திற்கு
  வந்திருந்துதன் நகர் மீண்டனன்,
  இராய-152.
விகர்ணன்:-துரியோதனன்
  தம்பியருள்ஒருவன்;
  நற்குணமுடையவன்;வாய்மைக்