ச பா ப ரு வ த் தி ன் அரும்பதவகராதி முதலியன அக்கினியைமும்முறை வலம் வருதல், இராய -108 அக்ரபூசனை -முதற்பூஜை, இராய -112 அகண்டம் -எல்லாவுலகங்கள், [வடசொல்],சூது - 136 அகம் - துன்பம்,சூது - 49 அகமலர்ச்சியணி,சூது - 66 அங்குரித்தல்- முளைத்தல், தோன்றுதல், இராய - 146 [அங்குரம்- முளை] அச்சத்தினால்உடம்பு வெளுத்தல் இயற்கை,சூது - 146 அச்சுதன் -திருமால், கிருஷ்ணன், இராய -138 அசஞ்சலன் -சஞ்சல மில்லாதவன், சூது - 189 அசலம் -மலை, இராய - 16 அசுவலக்ஷணம்,சூது - 81 உரை அசைவு - அயர்ச்சி,சோர்வு, சூது - 114 அஞ்சனம் -மை, இராய - 73, சூது - 247 அஞ்சு=ஐந்து;போலி, இராய - 81 அடர் -நெருங்கிய, சூது - 143; உவமவுருபாகவந்தது,இராய - 18 அடவி -காடு, சூது - 276 அடா - அடுத்து,நெருங்கிவந்து, சூது - 94 அடாத மன்னர்- பணியாத அரசர், இராய -50 அடி - முதன்மை,சூது - 65 அடிசில் -உணவு, இராய - 100 அண்டபித்தி- அண்டகோளத்தின் சுவர்நிலை,இராய - 132 அண்டர் -இடையர், இராய - 117, 121; தேவர்,இராய - 121, சூது - 28,58, 154 அதிர்த்தல்- இரைச்சலிடல், இராய -114 அந்தரம் -ஆகாசம், இராய-47, வேறுபாடு,89 அந்தன்-குருடன்,[வடசொல்], சூது - 183 அந்தோ -இரக்கக்குறிப்பிடைச்சொல், சூது - 219 அநுசர் - தம்பியர்,இராய - 66 அபநுதியணி [ஒழிப்பணியெனவும் படும்], சூது- 83, 221 அபயம் அபயம்என்றடி வணங்குதல், இராய -44 அபோதம் -அறிவின்மை, சூது - 183 அம்புயத்தோன்- பிரமன், இராய -122 அம்புராசி -நீரின் தொகுதி, கடல், இராய -115, சூது - 61 அம்புலி -சந்திரன், சூது-57 அம்புலி கண்டபைங்கடல், சூது - 57 அம்ம - வியப்பிடைச்சொல், சூது - 265 அம்மா என்றதிசயித்தல்,இராய - 3 அமரர் - நித்யசூரிகள்,சூது - 248 அமரர்போர்காண விமானத்திலேறி வானத்தில்வருதல், இராய - 129 அமளி - படுக்கை,சூது - 4 அயர்தல் -ஆடுதல், சூது - 161 அயர்வு -சோர்வு, இராய - 110 அயன் - அஜன்:பிரமன் (அ)- திருமாலினிடத்தினின்று,அஜன் - தோன்றினவன்.)இராய-10 உரை; 109 அயிர்த்தல்- சந்தேகித்தல், சூது - 162
|