தொடி-வளையல், சூது-270
தொடுதல்-ஏந்துதல், சூது-22
தொடை-தொடர்ச்சி, இராய-135;
மாலை,சூது, 74
தொடைக்குவாழை உவமை,
இராய-75
தொடைமுரண்,
சூது-44,160, 246, 247
தொடையல்-மாலை, சூது-124
தொடைவழியேபுள்வாய்குத்தல்,
சூது-254
தொண்டர்-அடிமைகள், சூது-279
தொண்டினர்-அடிமைகள், சூது-198
தொண்டு-அடிமை, சூது-239
தொத்து-கூட்டம், சூது-107
தொந்தயுத்தம், இராய-135
தோடு-இதழ்,சூது-54
தோதகம்-வஞ்சனைக்கருத்து,
சூது-67
தோயம்-நீர், சூது-86
தோள்-கை,இராய 7
தோள்கள்தினவுமிகுதல், இராய-20
தோள்கொட்டி ஆர்த்தல், இராய-22
தோற்றம்-கீர்த்தி, இராய-116; பெருமை,
சூது-34
தோன்றல்-அனைவரினுஞ் சிறந்து
தோன்றுபவன், இராய-9
நகம்-மலை,இராய-60
நகுதல்-பரிகசித்தல், சூது-196
நயனம்-கண்,இராய-149
நரமேதமகம்-மனிதர்களைக் கொன்று
செய்வதொரு யாகம், இராய-14
நரர்-மநுஷ்யர், இராய-41
நரவரி-மனிதவடிவங்கலந்த
சிங்கவடிவம், இராய-41
நல்வினை-ஸுக்ருதம், சூது-127
நவ்-தோணி,இராய-60
நவம்-புதுமை,இராய-33
நவியம்-கோடாலிப்படை, சூது-11
நவிர்-குற்றம், இராய-113, சூது-1, 173
நளினம்-செந்தாமரை, சூது-103
நன்னிலம் -வெற்றித்தானம்,
சூது-173
நஹிநிந்தாந்யாயம், சூது-254 உரை
நாககேதனன்-துரியோதனன்,
[கேதனம்-கொடி], சூது-203
நாகம்-யானை, இராய-42
நாகர்-தேவர், சூது-160
நாகர்கோன்-தேவேந்திரன், சூது-205
நாங்கள்என்றபொருளில்
'எம்மனோர்' என்றது - ஒப்பில்
போலி,சூது-11
நாட்டம்-கண், சூது-203
நாணுதல்-கூச்சங்கொள்ளுதல்,
சூது-165
நாம்-கவிக்கூற்றிற்குரிய இயற்கைத்
தனித்தன்மைப்பன்மை, சூது-56
நாராயணன்ஐவகைவடிவுடையன்,
இராய-142
நாவியின்மதம்-கஸ்தூரிப்புழுகு,
இராய-101
நாவுக்குஇசைந்தன-வாயில்
வந்தவை,
இராய-126
நாளிகேரம்-தேங்காய், சூது-105
நான்மருப்புநாகம்- ஐராவதம்,
இராய-42
நானம்-கஸ்தூரி, இராய-41,
வாசனைத்தைலம்,
இராய-98;ஸ்நானம், இராய-99
நிசாசரர்-இராக்கதர், இராய-62
நிசை-இருள்,இராய-45
நிணம்-கொழுப்பு, சூது-256
நித்திலம்-முத்து, இராய-33
நியமம்-செய்யவேண்டிய கடமைகள்,
சூது-4
நிருதிதிசை-தென்மேற்கு, இராய-39
நிருபதி-அரசன், இராய-72
நிறம்-மேன்மை, சூது-111; 200
நிறைகுடம்-பூர்ண கும்பம், இராய-75