பக்கம் எண் :

434அரும்பதவகராதி முதலியன

நினைவு-சங்கை, ஞாபகம், சூது-238
நீர்மை -விதம், சூது-69
நீர்மையின்மொழிதல் - தக்க
  வகையாகச்சொல்லுதல், இனிது
  கூறுதல்,சூது-69
நுனை-கூர்மை,சூது-274
நூபுரம்-சிலம்பு, சூது-60
நூல்வரம்பு-சாத்திரப் பிரமாணம்,
 இராய-7                 
நூறுமாமகத்தோன், இராய-21
நெகிழ்தல்-சரிதல், சூது-116
நெஞ்சம்-மனத்திற் கருதிய
  சூழ்ச்சி,[தானியாகுபெயர்],
  சூது-62
நெடியோன்-திருமால், கண்ணபிரான்,
  இராய-139
நெடுமுடி-உயர்ந்த சிகரம், சூது-61
நெய்தனிலக்கருப்பொருள்கள்,
  சூது-105
நென்னல்-நேற்று, [நெருநல்
  என்பதன்
  மரூஉ],சூது-13
நேடுதல்-தேடுதல், சூது-120
நேமி-சக்கரம், சூது-281
நேமியான்-சக்கராயுதமுடைய
  கண்ணன்,இராய-72
நொடி-மாத்திரைப்பொழுது, இராய-4
நோன்-வலிய, சூது-213, 272
நோன்றாள்வெங்கட்கட களிறு,
  சூது-213
பகலவன்-சூரியன், சூது-258
பங்கு-பக்கம், அருகு, இராய-84
பசு=யாகபசு,யாகத்திற்குரிய பிராணி,
  இராய-32
பசுபாலன்-கிருஷ்ணன், இராய-135
 பஞ்சுதருக்கள், சூது-77
 பஞ்சபாணம், சூது-77
படங்கு-கூடாரம், சூது-109
படம்-வஸ்திரம், சூது-142
படி-பண்பு;நிலைமை, வடிவின்
 தோற்றம், சூது-65; பூமி, சூது-83
பண்டி=வண்டி,சூது-109
பண்டு-பழமைகுறிக்கும்
 இடைச்சொல், சூது-131
பண்ணலங்கடந்தமென் சொற்பாவை,
  சூது-202
பண்ணலம்-இராகத்தின் இனிமை,
  சூது-202
பண்ணுதல்-அலங்கரித்தல்,
  இராய-127
பண்பு-நன்மை; எல்லாரியல்புகளும்
  அறிந்துஒத்து ஒழுகுதல்,
  இராய-152
பணை-வாத்தியம், இராய-54; பருத்த,
  சூது-22,மரக்கிளை, சூது-54;
  தந்தம்,சூது-174
பத்தி-வரிசை, சூது-143, பக்தி,
  சூது-280
பதாகை-துவசம், கொடி, இராய-23
பதாதி-காலாள், இராய-51
பதி-கணவன்,சூது-214
பந்தம்-தளை, பாதுகாவல், இராய-14
பப்பாதி-பாதிபாதி, இராய-34
பம்புதல்-நெருங்குதல், இராய-122
பயில-நன்றாக, சூது-134
பயிலுதல்-தேர்ந்திருத்தல், இராய-81
பரம்பரம்-உயர்ந்தவற்றினும்
 உயர்ந்தது; மிகவும் உயர்ந்தது,
  சூது-1
பரவுதல்-புகழுதல், சூது-131;
 சொல்லுதல், சூது-190
பராகம்-தூளி, இராய-45
பராவுதல்-துதித்தல், இராய-152
பரிதல்-முறித்தல், சூது-119
பரிதி-சூரியன், இராய-111; சூது-17,252
பரிமா-குதிரை   [இருபெயரொட்டுப்பண்புத்தொகை],
  சூது-100
பரிவு-பற்று,அன்பு, இராய-135
பரிஸ்தரணம், இராய-106
பலபடப்புனைந்த உவமையணி,
  சூது-77