பலபொருளுவமையணி, சூது-53
பலராமன்ஒருகாதிலே
குண்டலத்தையும் மற்றொரு
காதிலே
குழையையும்அணிந்தவன்,
இராய-140, உரை
பலவு-பலாமரம், சூது-92
பவ்வம்-கடல், இராய-60
பவம்-பிறப்பு, இராய-145
பவளத்தாரமுதமுண்ணல்-
அதரபானம், இராய-80
பவனகுமரன்-வீமன்,[பவனம்-வாயு],
சூது-251
பவனம்-காற்று, இராய-49, சூது-83
பவனிவருதல்-உலாப்போதல்,
இராய-72
பழனம்-கழனி, சூது-55, 256
பளிதம்-பச்சைக் கர்ப்பூரம்,
இராய-101
பற்பராகம்-பத்மராகம்: ஒரு
வகையிரத்தினம், இராய-65, 75
பன்னகம்-பாம்பு, சூது-194
பன்னி-பத்தினி, மனைவி, சூது-156
பனி-குளிர்ச்சி, சூது-142
பனிச்சை-கூந்தல், சூது-222
பனுவல்-நூல்,சூது-150
பனுவல்மாலை-
செய்யுட்கோவைகள்,சூது-2
பனைக்கொடியோன்-வீடுமன்,
இராய-88
பனைமரங்கள்யாகத்தில்
தோரணகம்பங்களாக
நாட்டப்படும், இராய-64 உரை
பாகு-பாகர்;உயர்திணைப்பொருள்
தரும்அஃறிணைச்சொல், சூது-119
பாசறை-படைவீடு, சூது-111
பாடலம்-பாதிரிமரம், சூது-92
பாடு-பக்கம், சூது-54
பாடை-பாஷை,மொழி, இராய-43
பாண்டவர்,முன்பு
இந்திரராயிருந்தவர்கள், இராய-95
பாதநம்-கீழ்வீழ்ந்து வணங்கு
தல்,[பதநம் என்பதன்
நீட்டல்,]சூது-139
பாந்தள்-பாம்பு, சூது-152, 192
பாயல்-படுக்கை, சூது-122
பார்த்திவர்-அரசர், இராய-112
பாரணம்பண்ணுதல்-உணவாக்
கொள்ளுதல், இராய-90
பாரதவர்ஷம், இராய-46
பாவகன்-அக்கினி, இராய-115
பாளையம்-படைவீடு, சூது-115
பாற்கடலைக்கடைதற்கு மந்தரமே
வலியது,இராய-16
பானல்-நீலோற்பலம், கருங்குவளை,
சூது-212
பிஞ்ஞகன்-சிவபிரான், [மயிற்பீலி
(பிஞ்சம்) யினாலாகிய
தலைக்கோலத்தை யுடைமையால்
வந்தது],இராய-46
பிடி-பெண்யானை, சூது-89
பித்தர்-உந்மத்தர், பைத்தியம் பிடித்தவர், சூது-261
பித்திகை-கருமுகைப் பூமாலை,
இராய-55
பிதாமகன்-பாட்டன், சூது-277
பிதிர்-துகள்; அது சிறுமைக்கு
ஆயிற்று,சூது-85
பிதிர்முழக்கு-சிற்றொலி, சூது-85
பிராசம்,இராய-56, 115, 121, 135; சூது-
71, 156,168, 216, 252
பிராயம்முதிர்ந்தபின்பும்
குடுமிமயிரைப் பின்னிக்
கொண்டிருத்தல் இடைய ரியல்பு,
இராய-120
பிரிநிலைநவிற்சியணி, சூது-95
பிறகுறிப்பு,இராய-116
பிறிதினவிற்சியணி, சூது-39, 42, 99;
சூது-188,274
பிறிதுமொழிதலணி, சூது-5, 7, 8, 11,
71, 138,230, 265
பீடு -பெருந்தன்மை, சூது-156
புகல்கிற்பாம்-கவிகளுக்கு உரிய
இயற்கைத்தனித்தன்மைப்
பன்மை,சூது-80
புண்டரம்-நெற்றியிலிடுங்குறி