பக்கம் எண் :

442அரும்பதவகராதி முதலியன

வெதிர்-வெதிரனது தன்மை, செவிடு,
  [பதிரன்-செவிடன்], சூது-187
வெந்காணுதல்-முதுகுகாணுதல்,புறங்      
  கொடுத்தோடச் செய்தல், சூது-22
வெம்-விரும்பப்படுகின்ற, இராய-114
வெம்மை-வேண்டல், விருப்பம்,
  சூது-257
வெய்யோன்-கொடியோனாகிய  
  துரியோதனன், சூது-236
வெரீஇ - சொல்லிசையளபெடை,
  சூது-120
வெள்ளம்-ஒரு பெருந்தொகை,
  இராய-88, சூது-10
வெள்ளைத் திருநிறத்தவன்-பலராமன்,
  இராய-71
வௌா-வெளுக்காத, சூது-146
வெற்றிபெற விரும்புபவர் கடவுளை
  முன்னிட்டுக்கொண்டே காரியத்தைத்தொடங்க வேண்டும்
  என்பது, சூது-280, 281
வென்றிகொள் அரசன்-வீடுமன்,
  சூது-271
வேட்டம்-வேட்டை, ஓட்டத்திற்கு  
 இலக்கணை, சூது-121
வேணி-சடை, இராய-11
வேணும்-வேண்டும், (மரூஉ),சூது-165
வேத்துநூல்-அரசநீதி, சூது-67
வேதிகை-யாகசாலையில் அமைக்கப்
  படுகிற மேடை, இராய-90
வேந்து [உயர்திணைப்பொருள் தரும்  
  அஃறிணைச்சொல்], இராய-113
வேய்-மூங்கில், சூது-136
வேயைவென்ற தோள் சூது-136
வேரி-தேன் சூது-74
வேல்-வேலமரம், சூது-11
வேள்விமாது-யாகபத்தினி, சூது-182
வேள்விமான்-யாகபத்தினி, சூது-214
வேளைஏறிய படைத்தலைவர் -
  மிக்க அநுபவமுடைய சேனைத்
  தலைவர், சூது-75
வேற்றுப்பொருள் வைப்பணி,
  சூது-68, 232
வேற்றுமையணி, சூது-267
வேறல்-வெல்லுதல், சூது-182
வை-கூர்மை [உரிச்சொல்], சூது-22
வைகுண்டம்-வி்ஷ்ணுலோகம்,
   இராய-142
வைத்து,உவமவாசகம், சூது-47