பக்கம் எண் :

443

சில அருந்தொடர்கள்.

எம்பெருமானைப்போற்றுவா ரெழுபிறப்பு மாற்றுவாரே,
இராய 1
   சுதன்மையினு முதன்மைபெறத் தொடங்கினானே, இராய-6
   தென்றற்காற்றினாலரும்பு நறுஞ் சூதம்போல், இராய-10 மாபுரிந்த
    திருக்கரத்துமதியிருந்த நதிவேணி மங்கைபாகன்,
இராய-11
    மண்மிசை நால்விரனிற்கும் மணிமகுடத்தணியரங்கு,
இராய-13
    வாரிதியை மதிப்பதற்கு வல்லது மந்தரமன்றி மற்றுமுண்டோ, இராய-16
    கலுழன்முன் நெறிக்கொள் ஈயென, இராய-21
    மந்தரகிரியும் விந்தமுந் தம்மின் மலைவபோல், இராய-22
    காலுடன் பறித்தகால், இராய-25
    கண்போல் வடுமுற்றியகனி, இராய-34
    காற்றிசைக்கும் நிருதித்திசைக்கும் நடு, இராய-39
    நான்மருப்பொருகை மும்மதத்து வயநாகம், இராய-42
    இடாதவன் தனமெனக் கரந்தனர்கள், இராய-50
    பழையகால்விழுத்த நெடுவேலைவீழ்வெற்பன், இராய-64
[விபீடணன்]
    தெருவெலாம் தாமேயாகி, இராய-74
    சூதடர்கொங்கை பொற்றோள் சுரிகுழல் சுமக்கலாற்றாப் பேதுறு
மருங்குல்,இராய-76
    மைவழிகண்ணினோக்கி மனனுறவணங்கினாரே, இராய-77
    வண்டுமலர் கரும்பாம் வண்ணப்படையான், இராய-80
    துளபமன்றலுக்கு வாணயனநீலவரிவண்டாகி நின்றார் சில மாதர்,
இராய-83
    எங்கும் உரைசெலக் கவர்ந்தசெல்வம், இராய-86
    இரும்பினைக்குழைக்கும்நெஞ்சர், இராய-88
    தூரியமுழக்கந்தன்னி னாரணமுழக்கமிஞ்ச, இராய-90
    பெருந்தகை நாபியம் பெருமன்வாழ்வுபோன்றிருந்தது யாகசாலை,
இராய- 92
    விதியினுமுயர்ந்தசொல் வியாதன், இராய-94
    அழற்பிறந்தமான் அழல்வளர்த்திடும் பெற்றி பெற்றனள், இராய-96
    கதியொடு பிறைதவழ் கடுக்கைக்காட்டு நன்னதி, இராய-99
    முந்நீர் வேலையின் மணலிற்சாலுமிகுசனம், இராய-100
    தழல்வருபாவை தழல்வளர் ஓமகுண்டத்தலத்தினில் வைக, இராய-103
    எல்லாவினைகளுந் தகனஞ்செய்வான், இராய-103
    கடகரியுரிவைபோர்த்த கண்ணுதற்கடவுண்மாறி, இடம்வலமாகப்
    பாகத்திறைவியோடிருந்தவா போல், இராய-104