சுருவையான் முகந்தநெய்யைச் சுருதியாலோமஞ்செய்தான், இராய-106 மயர்வறுஞானவடிவமாய்நின்ற மாயன், இராய-110 உருத்தங்கதிர்த்துக்கொதித்தோதினான், இராய-114 பூரம்புராசிப்புவிக்கென்று முதுவோர்கள் பொதுவோர்கொலோ, இராய-115 பாவையர்மனைதொறும் வெண்ணெய்க்காடினான் அவர்கண் முகந்தொறு மெச்சிலாக்கினான், இராய-119 கல்நாட்டும்படியாக இருவோரும் பொருதறிதும், இராய-128 சேனையாவையும் மெய்சிவந்தன சிந்தைமாமலர் கருகவே, இராய-131 படையெடுத்தனர் மாமறைப் பசுபாலனும் சிசுபாலனும், இராய-135 நுண்மையாவினு நுண்ணியார், இராய-136 அரணியினழல்போல் நரவரியுருவாய் அச்சுதன் தூணிலங்குரித்துத், தரணியின்உகிராற்பிளந்து, இராய-146 சுருதிக் கெட்டொணா தொளிருஞ் சுடர்மணித்துய்ய சோதி, இராய-149 தன்குலக்கதிர் போற்றேய்ந்தொளிசிறந்தான் தண்ணளித்தருமராசனுமே, இராய-153 புறஞ்சுவர் கோலஞ் செய்வான், சூது-5 வசையிசையாகக்கொள்வான், சூது-7 சொல்லிடைநஞ்சு கக்குந் துன்மதியுடையதம்பி, சூது-8 அல்லிடை நிறைந்த தேனு மமுதவெண்கிரணத்திங்கள், எல்லிடை யிரவிமுன்னர்எவ்வுழி நிகர்க்கும், சூது-8 முனைவருகூர்முள்வேலை முளையிலேகளையினல்லால், நனிவர வயிர்த்தபோதுநவியமும் மடியுமன்றே, சூது-11 சல்லியமிகுபோர்செய்யச் சல்லியன்றன்மேற் சென்றான், சூது-17 பாமருபனுவன்மாலைப் பாண்டவர், சூது-26 கஞ்சப்புரவலன் ஒழிவுகண்ட திங்களினுயர்ச்சிபோல, சூது-39 ஏவல்மாற்றம்பிற்பட முற்பட்டோடி, சூது-44 செஞ்சொற்காவியமக்கட்கெல்லாங் கருத்துறுகவினிற்றாகி, சூது-46 பழியிலாவிசைகொள்நீதிப் பாண்டவர், சூது-50 பாரினுக்குயிரேபோலும் பாண்டவர், சூது-52 அறங்குடியிருப்பதோர் தெய்வவான்பதி, சூது-53 வானகந்தனை யமையுமென் றும்பரு மண்ணின்மேல் வரவெண்ணும், ஞானகஞ்சுகன்நகரி, சூது-56 அந்தண் அம்புலிகண்ட பைங்கடலென, சூது-57 விதியினை யாவரே எதிர்வெல்வார், சூது-68 முளையிலே யுயிர்கொய்வதோர் கடுவிடமுற்றி வன்காழேறி, விளையிலேதுசெய்யாது, சூது-71 செல்வதென் கொடியவனருகு, சூது-72. (Cp: Ifyou touch pitch, you will bedefiled) |