பக்கம் எண் :

இராயசூயச் சருக்கம் 8

     செம்கோல் - கோணலில்லாதகோல்;  அதுபோலப் பக்ஷபாதமாக ஒரு
பக்கத்திற் கோணுதலின்றி நேர்மையுடைய அரசாட்சிக்கு வழங்கும்;
உவமையாகு பெயர்.  அரசாட்சியை வடநூலாரும் 'தண்டம்' என்பர்.
செங்கோன்மை, மை- பகுதிப்பொருள் விகுதி.  தெவ் - பகைமையுணர்த்தும்
உரிச்சொல்;  இப்பெயருரிச்சொல் -  பண்பாகுபெயராய், பகைவரை
யுணர்த்தும்.  தெவ்+மாற=தெம்மாற;  "தெவ்வென்மொழியே.................மவ்வரின்
வஃகான் மவ்வுமாகும்".                                  (3)

4.மேனாளிவ் வுலகாண்டவிடபருவ னசுரகுல
                                வேந்தர்வேந்தன்,
றானாண்மை யுடன்பொருது தரியலரைத்திறைகொணர்ந்த
                                 தாரா பந்தி,
போனாளு மொளிவீசும் பலமணிகள்விந்துவெனும் பொய்கை
                                 தன்னி,
லானாமற் கிடப்பனவுண்டவையிதற்கே யுபகரணமாகு
                                 மென்றான்.

     (இ-ள்.) மேல் நாள் - முன் ஒரு காலத்தில், இ உலகு ஆண்ட -
இந்த நிலவுலகத்தை அரசாண்ட, அசுரகுலம் வேந்தர் வேந்தன் -
அசுரர்குலத்துத்தோன்றிய அரசர்கட்கு அரசனான, விடபருவன் - வ்ருஷபர்வா
என்னும் பெயருள்ள அசுரசிரேஷ்டன், தான்-, ஆண்மையுடன் பொருது-
பராக்கிரமத்துடனே போர்செய்து, தரியலரை திறை கொணர்ந்த -
பகைவர்களை வென்று அவர்களிடத்தினின்று அரசிறையாகப்
பெற்றுக்கொண்டுவந்த, தாராபந்திபோல் நாளும் ஒளி வீசும் -
நக்ஷத்திரவரிசைகள்போல எப்பொழுதும் ஒளியை வீசுகிற, பல மணிகள்-
பலவகை யிரத்தினங்கள், விந்து எனும் பொய்கை தன்னில் ஆனாமல் கிடப்பன
- பிந்து வென்னும் பெயருள்ள சரசில் நீங்காதவையாய்க் கிடப்பவை, உண்டு-;
அவை - அந்த இரத்தினங்கள், இதற்கே உபகரணம் ஆகும்-இந்த
மண்டபமமைத்தற்கே உரிய சாதனமாகும், என்றான் - என்று (மயன்)
கூறினான்;  (எ - று.)

     நாளும் ஒளிவீசும்-பகலிலும் இரவிலும் வேறுபாடின்றிப் பிரகாசிக்கு
மென்றபடி.  'புதுமணிகள்' என்றும் பாடமுண்டு.  திறையாவது - வென்ற
அரசர்க்குக் கீழமைந்த அரசர் கொடுக்கும் பொருள்.  வென்ற அரசர் தோற்ற
அரசர்களிடத்தினின்று வலியக்கவர்வனவும், திறை யெனப்படும்.  பல நிறமாய்
விளங்கும் பலசாதி மணிகட்கு, பலநிறமாய் விளங்கும் பலவகை
நக்ஷத்திரங்களின் நிரையை உவமை கூறினார்.

    வ்ருஷபர்வா, அஸு ரகுலம், தாராபங்க்தி, மணி, பிந்து, உபகரணம் -
வடசொற்கள்.  வேந்தர்வேந்தன்-ராஜராஜன்.  ஆண்மை - ஆண்தன்மை.
பௌருஷம்.  ஆண்மையுடன், 'உடன்'- மூன்றாம் வேற்றுமை யுருபு,
அடைமொழிப் பொருளில் வந்தது;  ஆண்மையுடையவனாய் என்றபடி;
ஆண்மையினால் என்று கொண்டு, கருவிப்பொருளில் வந்த தெனினுமாம்.
'தரியலரை' என்றவிடத்து இரண்டனுருபு - தரியலரினின்று என்று ஐந்தனுருபின்
பொருள்படுதலால், உருபுமயக்கம்.  விந்துவெனும் பொய்கை -